Ruscism Twitter
உலகம்

Ruscism: இணையத்தில் வைரலாகும் புதிய போர்ச் சொல் - அதன் பொருள் என்ன?

ரஷ்யாவின் பாசிசம் என்பது தான் இதன் பொருள். மேலும், இந்த சொல் இத்தாலிய, ரஷ்ய மொழி உட்பட ஆங்கிலத்தோடு கலந்து உருவாக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

NewsSense Editorial Team

மொழி சொற்களாலும், சொற்கள் சூழல்களாலும் மாற்றங்களைக் காண்கின்றன. 'கொல வெறி' என்கிற சொல், ஒய் திஸ் கொல வெறி டி என்கிற பாடலுக்குப் பிறகு பிரபலமடைந்தது போல, தற்போது Ruscism (ரஷ்ஷிசம்) என்கிற சொல் இணையம் முழுக்க பரவி வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உக்ரேனிய அரசுக்குச் சொந்தமான அனைத்து சமூக வலைதள கணக்குகளிலும் இந்த Ruscism என்கிற சொல் ஹேஷ்டேகுடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் பொருள் என்ன? இதை எப்படி உச்சரிக்க வேண்டும்?

பாசிசத்தை உச்சரிப்பது போல, எஃப் என்கிற ஆங்கில எழுத்தைத் தவிர்த்து, ஆர் யூ என்கிற ஆங்கில எழுத்துக்களைச் சேர்த்து உச்சரிக்க வேண்டியது தான். ரஷ்ஷிசம்.

ரஷ்யாவின் பாசிசம் என்பது தான் இதன் பொருள். மேலும், இந்த சொல் இத்தாலிய, ரஷ்ய மொழி உட்பட ஆங்கிலத்தோடு கலந்து உருவாக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

செலென்ஸ்கி

" ரஷ்ஷிசம் என்பது ஒரு கருத்து, அது வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறும். விக்கிபீடியா பக்கங்களில் இடம் பெறும், பள்ளி வகுப்பறைகளில் இடம்பெறும். இந்த ரஷ்ஷிசம் எப்போது தொடங்கப்பட்டது, எங்கு நடந்தது, இந்த மோசமான கருத்துக்கு எதிரான போரில் சுதந்திரத்துக்கு யார் உதவினார்கள் என உலகம் முழுக்க உள்ள பள்ளிக் குழந்தைகள், தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து தங்கள் ஆசிரியர்களிடம் விடையளிப்பர்" என உக்ரைன் நாட்டின் அதிபர் விலொடைமெர் செலென்ஸ்கி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார்.

Russia - ukraine war

ரஷ்ய துருப்புகள், தங்கள் பகுதியில் ஏற்படுத்தி இருக்கும் கடுங்சேதத்தையும், தங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் அனுபவிக்கும் வேதனையையும் வெளிப்படுத்த, ரஷ்ஷிசம் என்கிற பதத்தை மரியுபோல் நகர கவுன்சிலர்கள் முதலில் பயன்படுத்தினர்.

தற்போது ரஷ்ஷிசம் என்கிற சொல், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப்... என பல்வேறு சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

"இது ரஷ்ஷிசம் என எல்லோரும் கூறுவதால் மட்டும் இது ரஷ்ஷிசம் ஆகிவிடவில்லை. இந்த நவீன உலகில், 80 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய கண்டத்தில் நடந்தது தான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 80 ஆண்டுகளில் இப்படிப்பட்ட கொடூரமான வெறிச்செயல்கள் ஐரோப்பிய கண்டத்தில் நடக்கவில்லை என்பதை நீங்கள் பகுப்பாய்ந்து பார்த்தால் தெரியவரும்" என செலென்ஸ்கி ஜெர்மனியின் நாஜிக்கள் வரலாற்றைக் சுட்டிக்காட்டிக் கூறினார்.

"மனிதர்களைக் கொல்வது, கொடுமைப்படுத்துவது என எல்லாவற்றையும் குழந்தைகளுக்கும் செய்தனர், இளம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, வன்புணர்ச்சி என எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நாஜிசம்" என்று உக்ரைன் அதிபர் செலென்ச்கி கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?