Zealandia
Zealandia GNS
உலகம்

Zealandia: நியூசிலாந்து ஆஸ்திரேலிய கண்டம் இல்லையா? - உலகின் 8 வது கண்டம் பற்றி தெரியுமா?

Antony Ajay R

தெற்கு பசிபிக் கடலின் ஆழத்தில் இருக்கிறது ஒரு தொலைந்து போன கண்டம்.

உலகில் 7 கண்டங்கள் தான் இருக்கிறது என நாம் படித்திருக்கிறோம். இதனால் இந்த 8வது கண்டம் குறித்த செய்தி உங்களுக்கு வியப்பை அளிக்கலாம்.

எட்டாவது கண்டம் குறித்து ஆய்வாளர்களுக்கு பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த கண்டம் முன்னொரு காலத்தில் இருந்துள்ளதை நிரூபித்தும் காட்டியுள்ளனர்.

உலகின் 8 வது கண்டம் உண்மையா? ஒரு அறிவியல் பார்வை | பாகம் 1

சிலாண்டியா : டைனோசர்கள் சுற்றி திரிந்ததா இந்த 8 வது கண்டத்தில்? - விலகாத மர்மம் | பாகம் 2

கடந்த 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கோண்ட்வானாலாந்து என்ற 'சூப்பர் கண்டம்' (Super Continent) இருந்தது. அதிலிருந்து பிரிந்ததே சிலாண்டியா. உலகின் எட்டாவது கண்டம்.

கடந்த 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த கண்டம் கடலில் மூழ்கத் தொடங்கியிருக்கிறது.

5 மில்லியன் சதுர கிலோமிட்டர் பரப்பு கொண்ட இது ஆஸ்திரேலியாவுக்கு கிழக்காக அமைந்திருந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைப் போல ஒன்றரை மடங்கு பெரியது.

ஒரு கண்டமாக இருப்பதற்கான அத்தனை தகுதிகளையும் சிலாண்டியா கொண்டிருக்கிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

நியூசிலாந்தைச் சேர்ந்த ஜி.என்.எஸ் சயின்ஸ் என்ற ஆய்வுக்குழு சிலாண்டியா பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.

94 விழுக்காடு சிலாண்டியாவின் நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியிருக்கிறது. எஞ்சியிருப்பது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில சிறிய தீவுகள் மட்டுமே.

இதனை ஜி.என்.எஸ் வெளியிட்ட புகைப்படத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த புகைப்படத்தில் சாம்பல் நிறத்தில் இருக்கும் பகுதிகள் மூழ்கிய சிலாண்டியா மற்றும் அதன் மேல் பச்சை நிறத்தில் தெரிவது இப்போது தண்ணீருக்கு மேல் இருக்கும் தீவுகள்.

இப்போது வரை ஆஸ்திரேலியா கண்டத்தின் பகுதியாகவே நியூசிலாந்து கருதப்பட்டு வருகிறது. ஆனால் அதன் பெரும்பகுதிகள் கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கிறது. இப்படி இந்த புவி வரலாற்றின் பல தடையங்கள் நீருக்கு கீழ் புதைந்துகிடக்கின்றன என்றால் மிகையாகாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?