விமானத்தில் பயணத்திற்கு இந்த சீட் தான் பாதுகாப்பானது - ஏன் தெரியுமா? canva
உலகம்

விமானத்தில் பயணத்திற்கு இந்த சீட் தான் பாதுகாப்பானது - ஏன் தெரியுமா?

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் பகுப்பாய்வின்படி, விமானத்தில் இறப்பதற்கான வாய்ப்புகள் 205,552 பேரில் ஒருவருக்கும், காரில் 102 பேரில் ஒருவர் இறக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

Keerthanaa R

நம்மில் பலருக்கு இன்னமுமே பெருங்கனவாக இருப்பது விமான பயணம். என்ன தான் கார், பைக், ரயில் என நாம் பயணிக்க போக்குவரத்து சாதனங்கள் ஏராளமாக இருந்தாலும், விமானத்தில் பயணிப்பது தான் பாதுகாப்பானது என கூறப்படுகிறது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் பகுப்பாய்வின்படி, விமானத்தில் இறப்பதற்கான வாய்ப்புகள் 205,552 பேரில் ஒருவருக்கும், காரில் 102 பேரில் ஒருவர் இறக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

எனில் விமான பயணம் தான் பாதுகாப்பானது. இந்த விமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் அதிக பாதுகாப்பு என தெரியுமா? இந்த பதிவில்...

ரயில், பஸ், விமானம் என எதில் பயணித்தாலும், நமக்கு விருப்பமான இருக்கையை நாம் தேர்ந்தெடுக்கலாம். சிலருக்கு ஜன்னல் இருக்கை பிடிக்கும். சிலர் முன்னிருக்கையை விரும்புவார்கள். விமானம் தரையிறங்கியதும் முதலில் கீழே இறங்க நினைப்பார்கள்.

சிலருக்கு சாவகாசமாக, கால்களை நீட்டிக்கொண்டு உட்கார வேண்டும் என்று இருக்கும்.

ஆனால், விமானத்தில் பயணிக்கும்போது நடு இருக்கைகள் தான் பாதுகாப்பானது என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது

TIME நடத்திய ஆய்வில், கடந்த 35 ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகளில் நடுவில் இருக்கும் இருக்கைகளில் அமர்ந்தவர்கள் குறைவாகவே மரணித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

குறிப்பாக நடு இருக்கைகளில் பின்னால் அமர்ந்தவர்கள் 28 சதவிகிதம் தான் இறந்துள்ளனர்.

விபத்துகள் ஏற்படும் பட்சத்தில், நமக்கு முன்னாலும், பின்னாலும் பயணிகள் இருப்பார்கள். இதனால் நடுவில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு கொஞ்சம் அதிகமே

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?