2024 தேர்தல்களின் ஆண்டு எனக் கூறப்படுவது ஏன் தெரியுமா? Twitter
உலகம்

2024 தேர்தல்களின் ஆண்டு எனக் கூறப்படுவது ஏன் தெரியுமா?

Antony Ajay R

உலக அரங்கில் 2024 தேர்தல்களின் ஆண்டாக பார்க்கப்படுகிறது. உலகில் பல பெரிய-சிறிய நாடுகளுக்கு முக்கியமான தேர்தல் நடக்கவிருக்கும் ஆண்டு 2024.

உலகின் ஜனநாயக வரலாற்றிலேயே இது மிக முக்கிய ஆண்டாக பார்க்கப்படுகிறது. 60 நாடுகளுக்கும் மேல், உலகின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் இந்த ஆண்டில் நடைபெற உள்ளன.

அடுத்ததாக இதுபோன்ற தேர்தல்களின் ஆண்டு வர இன்னும் 28 ஆண்டுகள் எடுக்கும்.

பங்களாதேஷ் நாட்டில் ஜனவரி 7ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசினா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என அமெரிக்கா முதலிய நாடுகள் குற்றச்சாட்டு முன்வைத்தன.

தைவான் தேர்தல் ஜனவரி 13ம் தேதி நடந்து முடிந்தது. ஆபத்தான பிரிவினைவாதி என சீன அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்ட லை-சிங் டி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்ட பிறகான முதல் தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடைபெற இருக்கிறது.

பிப்ரவரி 14ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற இருக்கும் தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும் மிகப் பெரிய தேர்தலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தேர்தலும் அமெரிக்க அதிபர் தேர்தலும் இந்த ஆண்டில் நடைபெற இருக்கின்றன. இங்கிலாந்து, ரஷ்யா, உக்ரைன், மெக்ஸிகோ, தென் கொரியா, ஈரான் என பல நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. பிரதமர் மோடி 2014, 2019ஐத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா இல்லை இந்தியா கூட்டணி புதிய வரலாற்றைப் படைக்குமா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?