சீனா: செயற்கை கோள்கள், ட்ரோன்கள் வளர்ந்த காலத்திலும் உளவு பார்க்க பலூன்களா? - காரணம் என்ன? Twitter
உலகம்

சீனா: செயற்கை கோள்கள், ட்ரோன்கள் வளர்ந்த காலத்திலும் உளவு பார்க்க பலூன்களா? - காரணம் என்ன?

பலூன்கள் 18ம் நூற்றாண்டில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 21ம் நூற்றாண்டில், விஞ்ஞானம் பெரிய அளவில் வளர்ந்த பின்னரும் சீனா எதிரிநாடுகளை உளவு பார்க்க பலூன்களை பயன்படுத்துவது ஏன்? விரிவாகப் பார்க்கலாம்...

Antony Ajay R

சீன உளவு பலூன்களின் எஞ்சிய பகுதிகளைத் தேடுவதில் அமெரிக்க இராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

கடைசித் துண்டு வரை தேடி எடுப்பது என உறுதி பூண்டுள்ளனர். அமெரிக்கா மட்டுமில்லாமல் கனடா, இந்தியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் சீனாவின் பலூன்களால் கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த உளவு பலூன்களில் செயற்கைக் கோள் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பயணிகள் விமானங்கள் பறக்கும் உயரத்தில் பறப்பதால் விமானங்களுக்கும் ஆபத்துகளை விளைவிக்கக் கூடும் என கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

பலூன் விவகாரத்தில் குறிப்பிடப்படும் நாடுகள்

அமெரிக்கா ஆண்டு பட்ஜெட்டில் இராணுவத்துக்காக 1.90 ட்ரில்லியன் டாலர்கள் செலவு செய்கிறது. சீனா 200 பில்லியன் டாலர்களும், உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யா 84 பில்லியன் டாலர்களும் செலவு செய்கிறது.

இராணுவத்தில் அதிநவீன தொழில்நுட்பமும், பயங்கர ஆயுதங்களும், நுட்பமான தந்திரங்களையும் தெரிந்து வைத்துள்ள இந்த நாடுகள் பலூன் விவகாரத்தில் முட்டிக்கொள்கின்றன.

பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா சீனா மீது உளவு பலூன் குற்றச்சாட்டை வைத்தது. இதே பலூன் தொழில்நுட்பத்தை தான் உக்ரைனை உளவுபார்க்க ரஷ்யாவும் பயன்படுத்துகிறது.

சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன்

ஆனால் சீனாவோ பலூன்கள் வானிலை ஆய்வுக்காக அனுப்பப்படுவதாக தெரிவித்தது. இதை கனடாவோ, அமெரிக்காவோ நம்ப மறுக்கிறது.

பலூன்கள் 18ம் நூற்றாண்டில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 21ம் நூற்றாண்டில், விஞ்ஞானம் பெரிய அளவில் வளர்ந்த பின்னரும் சீனா எதிரிநாடுகளை உளவு பார்க்க பலூன்களை பயன்படுத்துவது ஏன்? விரிவாகப் பார்க்கலாம்...

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்

இரண்டாம் உலகப் போரில் பலூன்கள் பெரிய அளவில் பயன்பட்டன. 24,000 முதல் 37,000 அடி உயரத்துக்கு பலூன்களைப் பறக்கவிட்டனர்.

ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தைக் கண்டுபிடித்தது 1903. அதற்கு நூறு ஆண்டுக்களுக்கு முன்பே 1783ம் ஆண்டு ராட்சத ஹைட்ரஜன் பலூன்கள் விடப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பலூன்களை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என சிந்தித்தது அமெரிக்க இராணுவம்.

1950களில் சோவியத் யூனியனின் பகுதிகளை புகைப்படம் எடுக்க அமெரிக்கா இந்த பலூன்களை பயன்படுத்தியிருக்கிறது.

அட்லான்டிக் கடலில் விழுந்த பலூனை சேகரிக்கும் காட்சி

நூதனமானது மற்றும் மலிவானது

இந்த பலூன்கள் பயணிகள் விமானம் பறக்கு அடுக்குக்கு உயரே பறக்கிறது.

பலூன்கள் பலவகைகளில் திறன் உயர்த்தப்பட்டன. வான்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொள்ள பலவகை பலூன்களை நிறுவனங்கள் தயாரித்தன.

2022ம் ஆண்டு ஜப்பானி சன்ரிக்கு பலூன் மையம், மிகவும் அமைதியாக நிலப்பரப்பில் இருந்து 53 கிலோமீட்டர் பரப்பில் பறக்கக் கூடிய பலூன்களை உருவாக்கியது. பூமிக்கும் விண்வெளிக்கு இடையான கோட்டை இந்த பலூன்கள் எட்டின.

கண்காணிப்பு செயற்கை கோள்களைப் பயன்படுத்தினால் இந்த பலூன் செய்யும் ஆய்வுகள் அத்தனையையும் செய்ய முடியும். ஆனால் செயற்கைக் கோள் ஏவுவது சாதாரணகாரியமா? செயற்கை கோள்களை உருவாக்கவும் ஒருங்கிணைக்கவும் வானில் செலுத்தவும் பெரும் பணத்தை செலவிட வேண்டியது இருக்கும்.

மறுபக்கம் பலூன்கள் உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல் இயக்குவதற்கும் மிகவும் எளிமையானவை. மற்றும் இவற்றை உருவாக்கி விண்ணில் செலுத்த கொஞ்சம் நேரம் தான் ஆகும்.

அத்துடன் உளவு செயற்கைக்கோள் பிடிபட்டால் வானிலை ஆய்வுக்கானது என்றெல்லாம் கூறமுடியாது எனவும் சீனா நினைத்திருக்கலாம்.

அமெரிக்க இராணுவத்தால் பாதுகாப்பக்கப்படும் பலூனின் பகுதிகள்

ட்ரோன்களைப் பயன்படுத்தியிருக்கலாமே?

இராணுவத்தில் அதிநவீன உளவு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது உண்மை தான். ஆளில்லா வான்வழி வாகனங்கள் எனக் குறிப்பிடப்படும் (Unmanned Aerial Vehicles) பல இருந்தாலும் அவை 5,500 மீட்டர் உயரம் தான் பறக்கக்கூடிய திறனைப் பெற்றுள்ளன;.

அதேசமயம் பலூன்கள் 37,000 மீட்டர் உயரத்தில் பறக்கும். மேலும் ட்ரோன்களில் இருந்து சத்தம் வருவது தடுக்க முடியாதது, ஆனால் பலூன்கள் மிக மிக அமைதியாக வானில் பறந்துகொண்டிருக்கும்.

பலூன்கள் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பதனால் இனி வரும் நாட்களில் நாடுகளை அச்சுறுத்தக் கூடியதாக இவை இருக்கும். பலூன்களை கண்காணித்து அழிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?