பென்குயினுக்கு உயர் பதவி வழங்கிய நார்வே இராணுவம் - பின்னணி என்ன? Twitter
உலகம்

பென்குயினுக்கு உயர் பதவி வழங்கிய நார்வே இராணுவம் - பின்னணி என்ன?

நாய்கள், மோப்ப சக்தி அதிகமிருக்கும் எலிகளைக் கூட கன்னி வெடி எடுக்க பயன்படுத்துவார்கள். புறாக்களையும் அணில்களையும் டால்ஃபீன்களையும் உளவு பார்க்க பயன்படுத்துவதாக செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு பென்குயின் எப்படி இராணுவத்தில் அங்கம் வகிக்க முடியும்?

Antony Ajay R

நார்வே இராணுவத்தில் ஒரு பென்குயினுக்கு உயர் பதவி வழங்கியது ஆச்சரியப்படுத்தியுள்ளது. இராணுவத்தில் பல பிரிவுகளாக பல படிநிலைகளாக எக்கச்சக்க பதவிகளும் பட்டங்களும் வழங்கப்படும்.

தங்கள் இராணுவத்தின் 3வது உயரிய பதவியை பென்குயினுக்கு அளித்து அழகு பார்த்துள்ளது நார்வே இராணுவம். பொதுவாக இராணுவத்தில் நாய்கள் தான் இருக்கும்.

மோப்ப சக்தி அதிகமிருக்கும் எலிகளைக் கூட கன்னி வெடி எடுக்க பயன்படுத்துவார்கள். புறாக்களையும் அணில்களையும் டால்ஃபீன்களையும் உளவு பார்க்க பயன்படுத்துவதாக செய்திகளில் பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஒரு பென்குயின் எப்படி இராணுவத்தில் அங்கம் வகிக்க முடியும்?

சர் மூன்றாம் நீல்ஸ் ஓலாவ் என்பது அந்த பென்குயினின் பெயர். இது 1972ம் ஆண்டு முதல் நார்வே மன்னரின் பாதுகாப்பு படையில் இருக்கிறது.

அதாவது பாதுகாப்புபடை இந்த பென்குயினை தத்தெடுத்துள்ளது. ஸ்காட்லாந்தின் எட்டின்பெர்க்கில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த பென்குயின் வசித்து வருகிறது.



மேஜர் நீல்ஸ் மற்றும் மன்னர் ஓலாவ் பெயர்களை இணைத்து இதற்கு சர் நீல்ஸ் ஓலாவ் III எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பதவியில் இருந்த பென்குயினுக்கு பதவி உயர்வு அளித்து மேஜர் ஜெனரல் பதக்கம் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்வில் 160 இராணுவ சீருடை அணிந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

1972 முதல் பென்குயினை இராணுவத்தில் வைத்திருக்கும் வழக்கம் இருந்துவருகிறது. நார்வே அரசரின் காவல்படையின் அதிகாரப்பூர்வ அதிர்ஷ்ட விலங்காக இந்த பென்குயின் அறிவிக்கப்பட்டுள்ளது.

1982 இல் கார்போரல், 1987 இல் சார்ஜென்ட், 1993 இல் ரெஜிமெண்டல் சார்ஜென்ட் மேஜர், 2001 இல் கௌரவ ரெஜிமென்ட் சார்ஜென்ட் மேஜர், 2005, 2008 இல் நைட்ஹுட், 2016 இல் பிரிகேடியர் சர் மற்றும் இப்போது 2023 இல் மேஜர் ஜெனரல் என படிப்படியாக பதவி உயர்வு பெற்றது இந்த பென்குயின்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?