உலகிலேயே அழகான குதிரை இனம் எது தெரியுமா? எங்கே இருக்கிறது?
உலகிலேயே அழகான குதிரை இனம் எது தெரியுமா? எங்கே இருக்கிறது? Twitter
உலகம்

உலகிலேயே அழகான குதிரை இனம் எது தெரியுமா? எங்கே இருக்கிறது?

Priyadharshini R

அகல்-டெக் என்று அழைக்கப்படும் அரிய வகை குதிரை இனம் பற்றிய வைரல் வீடியோ இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

இந்த குதிரையின் ரோமம் தங்க-வெள்ளி போன்று சூரிய ஒளியில் மினுமினுக்கிறது.

துர்க்மெனிஸ்தானில் உள்ள கரகம் பாலைவனத்தில் காணப்படும் இந்த அகல்-டெக் குதிரைகள் அவற்றின் ரோமத்திற்காக கவனம் பெற்று வருகிறது. எக்ஸ் பக்கத்தில் கேப்ரியல் கார்னோவால் பகிரப்பட்ட வீடியோ, அகல்-டெக் குதிரையின் பிரம்மிப்பான தோற்றத்தைக் காட்டுகிறது.

இது ஒரு அரிய குதிரை இனம். இந்த இனத்தின் பளபளப்பான ரோமத்தின் காரணமாக உலகிலேயே அழகான குதிரைகள் என்ற பெயரை பெற்றுள்ளது.

துர்க்மெனிஸ்தானில் உள்ள கரகம் பாலைவனத்தில் இருந்து தோன்றிய அகால்-டெக் இனமானது அரேபிய குதிரைகளுடன் மூதாதையருக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தக் குதிரைகள் அவற்றின் சுறுசுறுப்பு, அழகு, பட்டுப்போன்ற முடி மற்றும் மெல்லிய உடலமைப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன.

தங்கக் குதிரைகள் என்று அழைக்கப்படும் அகல்-டெக் குதிரைகள் இந்தியாவில் 30 லட்சத்தை எட்டும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

விசுவாசத்திற்குப் பெயர் பெற்ற இந்த குதிரைகள் அவற்றின் உரிமையாளர்களை மட்டுமே சவாரி செய்ய அனுமதிக்கின்றன. உலகளவில் இந்த இனம் 7,000 க்கும் குறைவாக உள்ளது.

அகல்-டெக் துர்க்மெனிஸ்தானின் தேசிய விலங்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?