ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் ட்விட்டர்
உலகம்

ஜானி டெப்பை பின்னுக்கு தள்ளிய அம்பர் ஹெர்ட் - 2022ல் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்?

இந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் ஆம்பர் ஹெர்ட் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இவரது முன்னாள் கணவர் ஜானி டெப் இடம்பெற்றுள்ளார்

Keerthanaa R

2022ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவில் அதிகமாக தேடப்பட்ட பிரபலாமாக முதல் இடத்தை பிடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்ட்.

இந்த வருடத்தின் முதற்பாதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று ஹாலிவுட் நட்சத்திர தம்பதி ஜானி டெப் - ஆம்பர் ஹெர்டின் விவாகரத்து வழக்கு தான். தன் மீது பொய்யாக குடும்ப வன்கொடுமை குற்றச்சாட்டை சுமத்திய முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது அவமதிப்பு வழக்கை ஜானி டெப் தொடுத்திருந்தார்.

Amber Heard

கிட்ட தட்ட இரண்டு மாதங்கள் நடந்த இந்த வழக்கில் டெப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் ஆம்பர் ஹெர்ட்டின் பெயர் அவ்வப்போது அடிபடாமல் இல்லை. முன் ஒரு முறை உலகின் மிக அழகான முகம் கொண்ட நபர் என்று ஒரு அறிவியல் அறிக்கை அம்பர் ஹெர்ட் பெயரைக் கூறியது.

இந்நிலையில், இந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் ஆம்பர் ஹெர்ட் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இவரது முன்னாள் கணவர் ஜானி டெப் இடம்பெற்றுள்ளார்

பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார்

செலிப் டாட்லர் வெப்சைட்டின் அறிக்கையின்படி, ஆம்பர் ஹெர்ட்டை சராசரியாக ஒவ்வொரு மாதமும் 5.6 பில்லியன் மக்கள் கூகுளில் தேடியுள்ளனர்.

இந்த இணையதளம் 2022ல் கூகுள் தேடல் முறைகளில் இருந்து தரவை பகுப்பாய்வு செய்தது. 150க்கும் மேற்பட்ட பிரபலங்களை கண்காணித்ததில், இந்த பட்டியலில் ஜானி டெப் 5.5 மில்லியன் மாதாந்திர தேடல்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தில் மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் இடம்பெற்றுள்ளார். இவரை மொத்தம் 4.3 மில்லியன் பேர் தேடியுள்ளனர்.

இந்த பட்டியலில் ட்விட்டரின் தலைவர் எலான் மஸ்க், கால்பந்து வீரர் டாம் பிரேடி, ஹாலிவுட் நட்சத்திரங்கள் கிம் கார்தாஷியன், பீட் டேவிட்சன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதை தவிர கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 2022ல் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் 1,102,800,000 க்கும் மேற்பட்ட தேடல்களுடன் Facebook ஒரு முக்கிய வார்த்தையாக இருக்கிறது. யூடியூப் மற்றும் அமேசான் ஆகிய வார்த்தைகளும் அதிகமாக தேடப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியர் BTS இன் கிம் டேஹ்யுங் ஆவார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?