பெண் Twitter
உலகம்

சாப்பாட்டுக்காக McDonald's சன்னல் வழியாக ஏறி குதித்த இளம்பெண் - Viral Video

Antony Ajay R

ஒரு ஜான் வயிற்றுக்குத் தானே மொத்த வாழ்க்கையையும் நடத்துறோம். அந்த வயிற்று சாப்பாட்டுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் எனக் களமிறங்கியுள்ளார் ஒரு பெண்.

McDonald's ஒரு பிரபலமான உணவகம். உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட இந்த உணவகத்தின் மீல்ஸுக்கு பலரும் ரசிகர்களாக இருப்பர்.

அப்படிப்பட்ட ரசிகையான ஒரு பெண் தான் இந்த காரியத்தையும் செய்தது.

அவர் மெக்டொனால்ட்ஸின் ஜன்னலுக்கு வெளியே நின்று உணவை வாங்க வந்திருக்கிறார். ஆனால் அப்போது ஊழியர்களிடம் கையுறைகள் இல்லாததாலும் கொரோனா தொற்றுக் காரணமாகவும் அவருக்கு உணவு வழங்க முடியாத நிலை இருந்துள்ளனர்.

இதனை அந்த பெண்ணிடம் தெரிவித்தும் அவர் சமாதானமாகவில்லை.

மாறாக, ஜன்னலில் ஏறிக் குதித்து நேராகக் கடைக்குள் நுழைந்திருக்கிறார். இந்த வீடியோ டிக்டாக்கில் வெளியாகி வைரலானது.

உள்ளே வந்த அந்த பெண் தனக்கான உணவை தானே சமைத்துக்கொள்ள அனுமதிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேப் போல கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண் ஜன்னல் வழியாக உணவை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

வீடியோவில் தொடக்கத்தில் சிசிடிவியில் தெரிந்த அந்த பெண் வீடியோ முடியும் போது தேவையே இல்லாமல் முகத்தை மறைத்துக்கொண்ட காட்சியைப் பார்த்து யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?