அதிகப்படியான தண்ணீர் குடித்ததால் மருத்துவமனையில் இளம் பெண் அனுமதி - என்ன காரணம்? Twitter
உலகம்

அதிகப்படியான தண்ணீர் குடித்ததால் மருத்துவமனையில் இளம் பெண் அனுமதி - என்ன காரணம்?

மருத்துவர் அந்த பெண்மணிக்கு கடுமையான சோடியம் குறைபாடு இருப்பதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்திருக்கிறார்.

Priyadharshini R

கனடாவைச் சேர்ந்த பெண்மணி, சமூகவலைத்தளங்களில் வைரலான "75 ஹார்ட்" சேலஞ்சை மேற்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

75 நாட்களுக்கு தினமும் தோராயமாக நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது தான் அந்த சேலஞ். அந்த சவாலில் பங்கேற்ற பிறகு தனது வேதனையான அனுபவத்தை TikTok இல் பகிர்ந்துள்ளார்.

அதிகமாக தண்ணீர் குடித்ததால் அவரது உடல் நிலை சரியில்லாமல் ஆகி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Water

சவாலின் ஒரு பகுதியாக 12 நாட்களுக்கு தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடித்ததால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக TikTok வீடியோவில் அவர் விவரித்தார். இந்த சேலஞ்சை மேற்கொண்டு குமட்டல் ஏற்பட்டு, சாப்பிட முடியாமல் இருந்துள்ளது.

அதிகப்படியான நீர் நுகர்வு காரணமாக தனக்கு “வாட்டர் பாய்சன்” ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் அந்த பெண்மணி.

மருத்துவர் அந்த பெண்மணிக்கு கடுமையான சோடியம் குறைபாடு இருப்பதாகவும், இது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்திருக்கிறார். சோடியம் குறைபாடு என்பது நமது உடலிருந்து அதிகப்படியான உப்பு சத்து வெளியேறுதல் ஆகும்.

சோடியம் குறைபாடு, ஹைபோநெட்ரீமியா என்றும் அழைக்கப்படுகிறது. ஹைபோநெட்ரீமியா என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவு இயல்பை விட குறைவாக இருப்பதைக் குறிக்கிறது

அதிகப்படியான நீர் உட்கொள்ளுதல் உடலில் சோடியம் அளவுகளில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண்மணி ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் அளவுக்கு அதிகமாக குடிப்பதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு அரை லிட்டருக்கும் குறைவான தண்ணீரை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஒவ்வொருவரின் உடலும் வெவ்வேறு வகையான நிலைத்தன்மையை கொண்டுள்ளது, இது போன்ற சேலஞ்சுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?