video call (rep) Canva
உலகம்

பணம் கொடுத்து திட்டு வாங்கும் ஆண்கள்; வித்தியாசமாக சம்பாதிக்கும் பெண் - மாத வருமானம் என்ன?

Keerthanaa R

ஆண்களை திட்டி, அவமானப்படுத்தி மாதத்திற்கு 7 லட்சம் சம்பாதிக்கிறார் லண்டனை சேர்ந்த பெண் ஒருவர். ஒரு நாளைக்கு வெறும் இரண்டு மணிநேரம் தான் இவர் வேலை பார்க்கிறார்.

மூச்சுக் காற்று, எச்சில், சிறுநீர், விந்தணு நகைகள் என விநோதமான விஷயங்களை ஆன்லைனில் விற்று சம்பாதிப்பவர்கள் குறித்த செய்திகள் சமீப காலமாக அதிகம் கேள்விப்படுகிறோம்.

அந்த வகையில் இங்கும் ஒரு பெண் சற்று வித்தியாசமான முறையில் சம்பாதிக்கிறார். தொலைப்பேசி, வீடியோ கால் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டு அவர்களை வசைப்பாடுவது தான் இவரது வேலை.

ஜெனிஃபர் லவ் என்ற 25 வயது பெண் லாக்டவுனிற்கு முன் ரெஸ்டாரன்ட்டில் வேலை பார்த்து வந்தார். கொரோனா முழு முடக்கத்தின் போது பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், விளையாட்டாக அவரது தோழி ஒரு யோசனையை கொடுத்துள்ளார்.

Jenifer Love

அதன்படி ஜெனிஃபர் தனது பாதங்களின் புகைப்படங்களை இணையத்தில் விற்க துவங்கினார் ஜெனிஃபர். இரண்டு வருடங்களில் இந்த தொழில் ஏகபோக வரவேற்பை பெற, தற்போது லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார் ஜெனிஃபர். வெறும் 10 வினாடிகளுக்கு அவரது பாதத்தை பார்க்கவேண்டும் என்றால் அதற்கு £40 (3000 ரூபாய்), மூன்று நிமிட பெர்சனலைஸ்டு வீடியோக்களுக்கு £150 (13,000 ரூபாய்) கட்டணம் வாங்குகிறார் ஜெனிஃபர்.

இந்த மூன்று நிமிட வீடியோக்களில் அவர் பெரும்பாலும் ஆண்களை திட்டுவது, வம்புக்கு இழுப்பது, அவர்களை அவமானப் படுத்துவது போன்றதையே செய்கிறார். ஒரு நாளைக்கு வெறும் இரண்டு மணி நேரம் தான் இவர் வேலை பார்க்கிறார்

video call (rep)

தன்னை அவமானப்படுத்தும்படி அவர்களாகவே முன்வந்து பணம் செலுத்தி ஜெனிஃபரிடம் பேசுகின்றனர்.

வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆண்கள் தான். ஒரு முறை தனக்கு இப்படி வந்த அழைப்பில் மறுபக்கம் ஒரு பெண் இருந்ததாகவும், அதனை அறிந்து இவர் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார்

தான் செய்யும் இந்த வேலைக்கு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்தாலும், அவர் அதை கண்டுகொள்வதில்லை என்கிறார் ஜெனி. மேலும் இந்த வேலையில் அவருக்கு சுதந்திரம் இருப்பதாகவும் கூறும் அவர் "அவர்களே முன்வந்து தன்னை திட்டும்படி கூறும்போது நான் ஏன் வருத்தப்படவேண்டும்?" எனவும் கேட்கிறார்.

இதுவரை தனது அனுபவத்தில், வெப் கேமராவில் எச்சில் துப்புவது தான் மிகவும் விசித்திரமாக இருந்தது என்றார். அந்த வீடியோ காலில் மறுபுறம் இருப்பவர் தன் மீது எச்சில் துப்ப கூறுவார் என்றும், கேமராவை அந்த மனிதனாக நினைத்து இதை அவர் செய்வதாகவும் கூறினார்.

இவருக்கு பெரும்பாலும் வார இறுதி நாட்களில் தான் வேலை. ஜெனிபர் ஆஃப் தி ரெக்கார்ட் என்ற வெப்கேம் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தேவையற்ற, சர்ச்சைக்குரிய கோரிக்கைகளிலிருந்து விலகி இருக்க நிறுவனம் இவருக்கு உதவுகிறது. இந்த நிறுவனம் பெண்களுக்கு தெரப்பியும் வழங்கி வருகிறது.

video call (rep)

முதலில் தனது குடும்பத்தாரிடம் தான் செய்யும் வேலைக் குறித்து எதுவும் கூறவில்லை. பின்னர் அவர்கள் இதனை ஏற்று கொண்டதாகவும் ஜெனி தெரிவித்தார்.

இப்படி ஒரு மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார் ஜெனிஃபர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?