புவியீர்ப்பு வேலை செய்வதை நிறுத்தினால் என்ன செய்வது? இதுபோன்ற வித்தியாசமான எண்ணங்கள் எப்போதாவது உண்டா?
இந்த உலகில் ஈர்ப்பு விசையே செயல்படாத சில இடங்கள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட வினோதமான இடங்கள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள ஹூவர் அணை, புவியீர்ப்பு விசையே இல்லாத இடமாகும். நம்ப முடியவில்லையா?
இந்த இடத்தைப் பார்க்க நேர்ந்தால், இந்தப் பரிசோதனையை முயற்சிக்கவும். அணைக்கு அருகில் நின்று ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை அணையின் மீது ஊற்றவும். கீழே செல்வதற்குப் பதிலாக, தண்ணீர் மேல்நோக்கிப் பாயத் தொடங்குவதை நீங்களே பார்ப்பீர்கள்.
நீர் காற்றினால் மேல்நோக்கி கொண்டு செல்லப்படுகிறது, கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது, இல்லையா?
ஒரு நீர்வீழ்ச்சி தலைகீழாக செல்வதை கற்பனை செய்து பாருங்கள். விசித்திரம் இருக்கிறது அல்லவா? அத்தகைய இடம் உண்மையிலேயே உள்ளது.
பரோயே தீவுகளில், புவியீர்ப்பு விதியை முற்றிலும் மீறி, நீர் மேல்நோக்கி நகர்வது போல் தெரிகிறது.
நீர்வீழ்ச்சியின் ஓட்டத்திற்கு எதிராக பலத்த காற்று வீசும்போது நீர்வீழ்ச்சி தலைகீழாக செல்கிறது. பிரமிக்க வைக்கும் இந்த நிகழ்வை காண ஆசை இருக்கிறதா?
கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா குரூஸில் இருக்கிறது இந்த மிஸ்டரி ஸ்பாட். இங்கு இருக்கும் ஒரு மர வீட்டில் நீங்கள் ஈர்ப்பு விசையை மீறலாம்.
1939 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த மர்மமான இடம் 1940 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
மிகவும் கவர்ச்சிகரமான இடத்தில் நீங்கள் எவ்வளவு சரிந்து கீழே விழுவது போல சென்றாலும் விழமாட்டீர்கள். அதாவது எளிமையாக மைகேல் ஜாக்சனின் The anti-gravity lean போஸில் நிற்கலாம்.
இந்த அற்புதமான பாறை எந்த நேரத்திலும் விழுவது போல் இருக்கிறது. ஆனால் உண்மையில், இது 2500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் தான் இருக்கிறது.
இந்த பாறை புத்தரின் முடியால் பிடிக்கப்பட்டுள்ளது என்று புராணக்கதை கூறுகிறது. மேலும், பாறையை ஒரு பெண்ணால் மட்டுமே நகர்த்த முடியும் என்று பிரபலமான கதைகள் இருக்கின்றன.
இதனாலே பெண்கள் பாறையைத் தொட அனுமதிக்கப்படுவதில்லை. இது உண்மையில் மிகவும் விசித்திரமானது.
இது காஷ்மீர் லேயில் இருந்து கார்கில் நோக்கி 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய சாலையாகும். இது லடாக்கின் காந்த மலை என்று அழைக்கப்படுகிறது.
அவ்வழியில் செல்லும் வண்டிகள் அம்மலை இருக்கும் திசை நோக்கி ஈர்க்கப்படுகிறது என நம்பப்படுகிறது. ஆதலால் இம்மலை காந்தமலை எனப் பெயர்பெற்றது.
உங்கள் வாகனத்தை நியூட்ரல் கியரில் வைத்து எஞ்சினை ஆஃப் செய்தால், அது தானாகவே மெதுவாக நகரத் தொடங்கும். இதை நம்புவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பலர் இந்த பகுதியை மாயாஜால ஸ்பாட் என்று நம்புகிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust