Amou Haji Twitter
உலகம்

Amou Haji: உலகின் அழுக்கான மனிதர் காலமானார்! பல வருடங்கள் குளிக்காமல் இருந்தது ஏன்?

அமவு கிராமத்திற்குள் வசிப்பதில்லை. இவருக்கு சொந்தமாக வீடு எதுவும் இல்லை, துணையாக மனிதர்கள் இல்லை. கிராமத்திற்கு வெளியில் இருக்கும் பாலைவனத்தில் உள்ள நிறைவு பெறாத கட்டடங்களில் தான் வாழ்ந்து வந்தார்.

Keerthanaa R

உலகின் அழுக்கான மனிதர் என்று அறியப்பட்ட ஈரானை சேர்ந்த அமவு ஹாஜி உயிரிழந்தார். அவருக்கு வயது 94.

அமவு ஹாஜி என்பவர் தெற்கு ஈரானின் டேஜா என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் பல தசாப்தங்களாக குளிக்கவே இல்லை. குளித்தால் உடல் நலக் குறைவு ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினாலும், தண்ணீர் மீது உள்ள பயத்தினாலும், குளிப்பதை நிறுத்திவிட்டார்.

அமவு கிராமத்திற்குள் வசிப்பதில்லை. இவருக்கு சொந்தமாக வீடு எதுவும் இல்லை, துணையாக மனிதர்கள் இல்லை. கிராமத்திற்கு வெளியில் இருக்கும் பாலைவனத்தில் உள்ள நிறைவு பெறாத கட்டடங்களில் தான் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு பிடித்த உணவு முள்ளம்பன்றி கறி. மேலும் வீட்டில் சமைத்த உணவு என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார் என டிஎன்ஏ தளம் தெரிவிக்கிறது. இவருக்கு புகைப்பிடிக்க பிடிக்குமாம். ஒரே சமயத்தில் கையில் ஐந்து சிகரெட்களை வைத்து இவர் புகைக்கிறார்.

இவர் தனக்கு குளிக்க பிடிக்கவில்லை என்றும், குளித்தால் நோய்வாய்ப்பட்டு விடலாம் என்ற எண்ணத்தில், பல தசாப்தங்களாக குளிக்காமல் இருக்கிறார். இதனால் இவரை உலகின் அழுக்கான மனிதர் என்று கூறி வந்தனர்.

எனினும் ஊர் மக்கள் இவரை அழைத்துசென்று குளிக்கவைத்ததாக கூறப்படுகிறது. உலகின் அழுக்கான மனிதர் என்று அறியப்பட்ட ஹாஜி இன்று காலமானார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?