58 மணி நேரம் முத்தமிட்ட தம்பதி ட்விட்டர்
உலகம்

உலகின் நீண்ட முத்தம்: 58 மணி நேரம் முத்தமிட்ட தம்பதி; 8 வருடங்களாக தொடரும் கின்னஸ் சாதனை!

Keerthanaa R

மிக நீண்ட முத்ததிற்கான கின்னஸ் சாதனையை படைத்திருக்கின்றனர் தாய்லாந்தை சேர்ந்த தம்பதி. மொத்தம் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகள் இந்த முத்தம் நீடித்துள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த ஏக்கச்சாய் லக்‌ஷனா என்ற தம்பதி தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். 2013ல் Valentine’s Day அன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் பங்கேற்றனர். 'ரிப்லீஸ் பிலீவ் இட் ஆர் நாட்' என்ற நிறுவனம் இந்த சிறப்பு நிகழ்ச்சியை தாய்லாந்தின் பட்டாயா என்ற இடத்தில் நடத்தியது. பிப்ரவரி 12 முதல் 14 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Kiss

இதில் மொத்தம் ஒன்பது தம்பதிகள் பங்கேற்றனர். இந்த ஒன்பது தம்பதிகளில் ஒரு 70 வயது தம்பதியும் பங்கேற்றனர். இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் நின்றுக்கொண்டே அவர்களது இணையருக்கு முத்தம் கொடுக்கவேண்டும்.

ஒரு முறை முத்தம் கொடுக்க தொடங்கிய பின்னர் அவர்கள் விலகிவிட்டால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். உணவு, தண்ணீர் என எதை சாப்பிட்டாலும் இவர்கள் முத்தம் கொடுப்பதை நிறுத்தக்கூடாது. கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றாலும் இவர்கள் ஒருவரை ஒருவர் விட்டு விலகாமல் தான் இருக்கவேண்டும்.

இப்படி ஒருவரை ஒருவர் பிரியாமல் லிப் லாக் செய்துகொண்டே இரண்டு நாட்களுக்கும் மேலாக நின்றுள்ளனர் ஏக்கான்சாய் லக்‌ஷன தம்பதி. “இரண்டறை நாட்கள் நின்றுக்கொண்டும், தூங்காமலும் இருந்ததனால் இவர்கள் களைத்து இருக்கின்றனர்” என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

போட்டியில் பங்கேற்ற மற்ற தம்பதிகளில் சிலர் மூச்சுமுட்டியதால் போட்டியை விட்டு விலகியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் உலகின் மிக நீண்ட முத்ததிற்கான சாதனையை படைத்தவர்கள் 8 மணி நேரத்திற்கும் மேலாக தான் முத்தமிட்டனர். ஆனால் இந்த தம்பதி 58 மணி நேரம் முத்தமிட்டுக்கொண்டுள்ளனர். கின்னஸ் சாதனை படைத்த தம்பதிக்கு பிறகு மீண்டும் ஒரு முறை ஓரினச் சேர்க்கை தம்பதி ஒருவர் மீண்டும் இந்த போட்டியில் பங்கெற்றனர். ஆனால், இந்த கின்னஸ் சாதனையை அவர்கள் முறியடிக்கவில்லை. கிட்ட தட்ட புதிய சாதனை படைக்கும் அளவிற்கு நீண்ட அவர்களது முத்தம், வெறும் இரண்டே நிமிட வித்தியாசத்தில் சாதனையை முறியடிக்க தவறியதாக டைம்ஸ் நவ் தளம் தெரிவிக்கிறது.

இந்த போட்டியில் வென்ற ஏக்கான்சாய் லக்‌ஷனாவுக்கு இரண்டு வைர மோதிரங்களும், அன்றைய தேதியில் $3,300 பணமும் பரிசாக வழங்கப்பட்டது. இப்போது வரை இவர்களது சாதனை முறியடிக்கப்படவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?