ஒரு மில்லினியம் பழமையான வரலாற்றைக் கொண்ட இங்கிலாந்தின் கோட்டையை வாங்க ஒரு வாய்ப்பு!
ஹியர்ஃபோர்ட்ஷையரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்மோர் கோட்டை £450,000 (இந்திய மதிப்பில் 4,72,51,106 ரூபாய்) குறைந்த விலையில் சந்தைக்கு வருகிறது. 956 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையானது 29.84 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. இது இங்கிலாந்தின் நிலப்பரப்பில் ஒரு தனித்துவமான சொத்து ஆகும்.
அமைதியான ஹியர்ஃபோர்ட்ஷையர் நிலப்பரப்பின் மத்தியில் அமைந்துள்ள விக்மோர் கோட்டை ஆங்கில பாரம்பரியத்தின் முக்கியமான இடிபாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
கிரேடு I-பட்டியலிடப்பட்ட கோட்டை, 1067 ஆம் ஆண்டில் ஹெர்ஃபோர்டின் ஏர்ல் மற்றும் வில்லியம் ஃபிட்ஸ் ஆஸ்பெர்னால் கட்டப்பட்டது. பல நூற்றாண்டுகளாக பல்வேறு ராஜாக்கள் மற்றும் ராணிகளுக்கு விருந்தளித்து வந்த இந்த கோட்டை தற்போது விலைக்கு வருகிறது.
கோபுரங்கள் மற்றும் சுவர்களின் எச்சங்களைக் கொண்ட இந்த கோட்டை, இடைக்கால கட்டிடக்கலைக்கு சாட்சியாக நிற்கிறது. மேலும் ஆங்கில வரலாற்றில் முக்கிய தருணங்களைக் கண்டுள்ளது.
கோட்டையின் சில பகுதிகள் அரிய வகை தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடமாக பரிணமித்துள்ளது. இந்த வரலாற்று தளத்திற்கு இயற்கை மேலும் அழகு சேர்த்துள்ளது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust