இந்த கிளிகளால் பறக்க முடியாதா? கிளிகள் பற்றிய Wow Facts! canva
Wow News

இந்த கிளிகளால் பறக்க முடியாதா? கிளிகள் பற்றிய Wow Facts!

Keerthanaa R

ஒருவரின் குரல்வளம் நன்றாக இருந்தால் உடனே அவர்களை கிளிகளுடன் நாம் ஒப்பிடுகிறோம். கிளிகளை விரும்பாதவர்கள் இல்லை. நகரங்களில் இவற்றைப் பார்ப்பது அரிதான நிகழ்வு தான். கிராமங்களின் பக்கமாக சென்றால் வயல் வெளிகளின் மேல் பறப்பதை பார்க்கலாம். அல்லது விலங்கியல் பூங்காக்களில் கூண்டுகளில் பார்க்கலாம்.

இந்தியாவில் கிளிகளை செல்ல பிராணிகளாக வளர்க்க தடை இருக்கிறது.

இந்த கிளிகள் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்

கால்களால் உண்ணும் பறவைகள்

பறவைகள் அவற்றின் அலகுகளை வைத்து கொத்திக் கொத்தி உணவுகளை சாப்பிடும் என்று நமக்கு தெரியும்.

ஆனால் கிளிகள் வித்தியாசமானவை. இவைகளால் தங்களது கால்களை பயன்படுத்தி சாப்பிட முடியும். அதாவது ஒரு காலில் பேலன்ஸ் செய்துகொண்டு, மற்றொரு காலினால் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொள்கின்றன.

கிளிகள் பழம், பூக்கள், பூச்சிகள் என அனைத்தையும் உண்ணக்கூடியவை

இவற்றின் கால்களில் இருக்கும் மெலிதான் தோல்கள் மனிதர்களின் விரல்களை போல செயல்பட உதவுகிறது.

சத்தங்களை பிரதிபலிக்கும்

கிளிகள் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். இது இயற்கையாகவே அவர்களுக்கு இருக்கும் உள்ளுணர்வு. ஒரு விதத்தில் வாழ்வியல் முறை எனலாம்.

கிளிகள் அவை இருக்கும் இடத்தில் தோன்றும் சத்தங்களை கேட்டு பிரதிபலிக்கவல்லது. வாழும் இடத்தில் இருந்து விடுபட்டு இருக்கும் உணர்வை தவிர்க்க இவ்வாறு செய்கின்றன.

இதனால் தான் அவைகளை பேசப் பழக்குவதும் எளிதாக இருக்கிறது

300க்கும் மேற்பட்ட வகைகள்

உலகம் முழுவதிலும் கிளிகளில் சுமார் 390 வகைகள் இருக்கின்றன.

கிளிகளில் 3 வெவ்வேறு குடும்பங்கள் உள்ளன - சிட்டாகோய்டியா, காகடூய்டியா, மற்றும் ஸ்ட்ரிகோபொய்டியா.

ஒருவனுக்கு ஒருத்தி

கிளிகள் எப்போதும் ஒரே துணையுடன் தான் வாழ்கின்றன. இனப்பெருக்க காலம் அல்லாத போதிலும் தனது இணையுடனே வாழ்கின்றன கிளிகள். இணை இறந்தாலோ அல்லது இளம் பருவத்தில் குட்டிகளை பெற்றெடுக்க முடியாது என்ற நிலை வந்தாலோ தான் இவை மற்ற கிளிகளை நாடும்.

ஆண் கிளிகள் நடனமாடி, வித விதமான பாவனைகள், சத்தங்களை எழுப்பி பெண் கிளிகளை ஈர்க்கின்றன

வலுவான அலகுகள்

கிளிகளின் அலகு வளைந்து இருக்கும். மேல் அலகு கீழே இருக்கும் அலகினை விட பெரியதாக இருக்கிறது. கிளிகளுடன் நல்ல தோழமை இருந்தால் மட்டுமே அவற்றின் அலகுக்கு அருகில் கைகளை எடுத்து செல்லுங்கள்.

மிகவும் வலுவான அலகு என்பதால், தாக்கினால் விரல் உடையக் கூட வாய்ப்பிருக்கிறது.

பறக்க முடியாத கிளி

ககபோ என்ற வகை கிளிகள் தான் உலகில் மிகப் பெரிய கிளிகள். இவற்றின் அதிக எடை காரணமாகவே இந்த கிளிகளால் பறக்க முடியாது. இந்த வகை கிளிகள் கிட்ட தட்ட 142 தான் உலகில் இருக்கின்றன. இவை இரவில் விழித்திருக்கும் பறவை இனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?