அமைதியை தேடிய பயணம் : உலகின் 8 புனித மலைகள் பற்றி தெரியுமா? Twitter
Wow News

அமைதியை தேடிய பயணம் : உலகின் 8 புனித மலைகள் பற்றி தெரியுமா?

Antony Ajay R

மதங்களின் மீது ஒரு பெரிய கேள்வியாக வைக்கப்படுவது ஏன் எந்த மதமும் அது உருவான நிலப்பகுதியைத் தாண்டி வேற்று பிரதேசங்களைப் பற்றி  பேசுவதில்லை என்பது தான். 

மதத்துக்கான கதைகள், அந்தந்த நிலப்பரப்பின் மகிமையைப் பேசுபனவாக இருக்கின்றன. மக்கள் தங்களைச் சுற்றியிருக்கும் காட்டிலும் கடலிலும் நீர் நிலைகளிலுமே கடவுளைத் தேடிக் கண்டடடைந்தனர்.

அப்படி மலைகளும் ஆன்மிக ரீதியாக முக்கியத்தும் பெற்றுள்ளன. உலகில் உள்ள 8 புனித மலைகள் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

கைலாச மலை

கைலாச மலை

ஜெயின், பௌத்தம் மற்றும் இந்துத்துவத்தில் இந்த மலை முக்கியமானதாக கருதப்படுகிறது. 

இந்துக்கள் இந்த மலை சிவன் தங்கியிருக்கும் இடமாக கருதுகின்றனர். பிற மதத்தவர்களும் தங்கள் மத நம்பிக்கையின் படி கைலாசத்தை புனிதமாக கருதுகின்றனர்.

ஆதோஸ் மலை

ஆன்மிக ரீதியாக பெயர் பெற்றும் கலைநய மிக்கதாகவும் பார்க்கப்படுகிறது இந்த மலை. கிரீஸ் நாட்டில் உள்ள இந்த மலையில் பைசாண்டையர் காலத்தைச் சேர்ந்த ஒரு சிலை இருக்கிறது.

பெரும்பாலும் இங்கு துறவிகள் சூழ்ந்திருக்கின்றனர். இது புனிதமான மலை என்பதனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சினாய் மலை (sinai)

ஆன்மிகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் இடமாக சினாய் மலை பார்க்கப்படுகிறது. பெரிய பாறைமலைகளால் சூழப்பட்டுள்ள இந்த மலை எகிப்தில் உள்ளது 

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளிலும் இந்த மலை குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இயற்கை ஆர்வலர்களும் புனித யாத்ரீகர்களும் கூடுகின்றனர்.

உளுரு

ஆஸ்திரேலியாவின் நடுவில் இருக்கும் இந்த மிகப் பெரிய பாறை உள்ளூர் பழங்குடி மக்களுக்கு மிகம் முக்கியமானதாகும். இந்த மலையை அதன் ஆன்மிக சக்திகளுக்காக கடவுளாகவே வழிபடுகின்றனர். சூரியன் உதிக்கும் போதும் மறையும் இதன் நிறத்தை மாற்றிக்கொண்டு அற்புதமான காட்சிகளை வழங்கும். 

ஒலிம்பஸ்

கிரேக்கர்களின் புனித மலையாக ஒலிம்பஸ் கருதப்படுகிறது. இந்த மலையின் உச்சி மூக்கில் 12 ஒலிபியன் கடவுள்களும் வாழ்ந்ததாக கிரேக்க மக்கள் நம்பினர்.

வெசுவியஸ் மலை

ஹெர்குலஸ் என்ற கடவுள் உருவாக்கிய மலையாக கருதப்படுகிறது வெசுவியஸ். இங்குள்ள எரிமலையும் புனிதமானதாக கருதப்படுகிறது.

ஃபூஜி மலை

ஜப்பானில் உள்ள இந்த மலை புத்த யாத்ரீகளிடம் புகழ்பெற்றது. இங்கு மலையேற்றம் செய்யவும் மக்கள் வருகின்றனர். ஜப்பானிலேயே மிகப் பெரிய மலை இது தான்.

அரரட் மலை (Ararat)

துருக்கியில் உள்ள இந்த மலையில் தான் நோவாவின் படகு இறுதியில் இறங்கியதாக ஜூடியோ-கிறிஸ்தவ மதங்கள் நம்புகின்றன.

இந்த மலைக்கு இரண்டு உச்சிகள் இருக்கின்றன. இந்த எரிமலையும் புனிதமாக கருதப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?