Somerton Man Twitter
Wow News

ராணுவ குறியீடுடன் கரை ஒதுங்கிய உடல் : உளவாளியா? - முடிவுக்கு வரும் 70 ஆண்டு மர்மம் ?

Keerthanaa R

70 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்த மிஸ்டெரி மேனின் கேஸ் தற்போது ஒரு முடிவை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது

விடை கிடைக்காத எண்ணற்ற விஷயங்கள் இவ்வுலகில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றிற்கு விடை தேடுவதில், சுவாரஸ்யமும், ஆபத்துகளும் அதிகம் நிறைந்திருக்கும். அந்த வகையில், ஏழு தசாப்தங்களாக காரணம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த ஒருவரது மரணத்திற்கு தற்போது விடைக் கிடைக்க போகிறது.

அதன் முதற்படியாக கண்டுபிடிக்கப்பட்ட நபரின் பெயர் மற்றும் அவர் யார் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

73 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒரு மனிதரின் உடல் கரை ஒதுங்கியிருந்தது. பாதி புகைத்திருந்த சிகரெட், போர்க்காலங்களில் பயன்படுத்தப்படும் ரகசிய குறியீடுகள் மற்றும் பெர்சியன் கவிதை ஒன்று அவரடமிருந்து மீட்கப்பட்டது.

அந்த நபர் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் இருந்தன. மேலும் அவரிடம் இருந்த பெர்சியன் கவிதைகளிலிருந்த 'தமாம் ஷுட்' என்ற வார்த்தையின் அர்த்தமும் ' முடிந்தது' என்றே மொழிபெயர்த்த பின், இவர் உளவாளி தான் என்ற சந்தேகம் இன்னும் வலுத்தது.

இவரை பற்றிய விசாரணைகள் தொடங்க, தகவல்கள் எதுவும் சரிவரக் கிடைக்கவில்லை.

காலப்போக்கில் இந்த கேஸ், 'சோமர்டன் மேன்' என்று பெயரிடப்பட்டு துப்புகள் துலக்கப்பட்டது. தொடர்ந்து 70 ஆண்டுகளாக மர்மமாகவே இருந்து வந்த சோமர்டன் மேன் வழக்கில் முதல் முடிச்சு அவிழ்ந்துள்ளது.

அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் டெரெக் அப்பாட் என்ற நபர் தான் இந்த மிஸ்டெரி மேனின் கேஸை மீண்டும் தோண்டி எடுத்தவர். அவர் கூறியதாவது, அந்த சோமர்டன் மேனுடைய பெயர் கார்ல் சார்ல்ஸ் வெப்.

இவர் மெல்போர்னெ நகரத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிகல் இன்ஜினியர். கடந்த 1948 ஆம் ஆண்டு சொமர்டன் கடற்கரையில் கரையில் உடல் கரை ஒதுங்கியது. இவரது வயது 40களில் இருக்கக்கூடும் என்றும், அவரது உயரம் 5 அடி 11 அங்குலம் என்றும் கண்டறியப்பட்டது.

இவரது உடலிலிருந்து மேலும் பஸ், ரயில் டிக்கெட்டுகள், சூயிங் கம் போன்றவை மட்டுமே கிடைத்த நிலையில், இவரை அடையாளம் கண்டுகொள்ளும்படி எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

இதனால், இவரது தலை முடியை மட்டும் சேகரித்து வைத்துக்கொண்டு, கார்ல் வெப் ஐ புதைத்துவிட்டனர். இவரது கல்லறையில் "இங்கு புதைக்கப்பட்டிருப்பவர், சோமர்டன் பீச்சில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த வருடம், மீண்டும் இவர் யார் என்ற மர்மத்தை கண்டுபிடித்தாகவேண்டும் என்ற நோக்கத்தில், டெரெக் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இவரது தலைமுடியை அமெரிக்காவின் பிரபல தடயவியல் நிபுணர் கோலின் ஃபிட்ஸ்பாட்ரிக் இடம் கொடுத்தார்.

இருவரின் ஆராய்ச்சியில் கிட்ட தட்ட 4000 பெயர்கள் ஒத்துப்போன நிலையில், கண்டுபிடிக்கப்பட்டவர் கார்ல் வெப் தான் என்று கடைசியில் தெரியவந்தது. அவர்கள் சந்தேகிக்கும் மனிதர் இவர்தான் என்று உறுதிப்படுத்திக்கொள்ள கார்லின் உறவினர்கள் யார், எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார் டெரெக்.

அவர்களின் கூற்றுப்படி, நவம்பர் 16 1905ல் மெல்போர்னின் ஃபுட்ஸ்க்ரேவில் பிறந்தவர் கார்ல். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். டோரதி ராபர்ட்சன் என்ற பெண்ணை மணம் புரிந்திருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

கார்லின் மனைவி அவரை பிரிந்த பின்னர் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டதால், டொரதியை கண்டுபிக்க கார்ல் இங்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார் டெரெக்.

கிடைத்த புள்ளிகளை இணைத்து, அடுத்தகட்டமாக கார்ல் எப்படி இறந்தார், எப்படி சோமர்டன் கடற்கரைக்கு அவரது உடல் வந்து சேர்ந்தது என்பதை கண்டுபிடிக்கவுள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலிய காவல் துறை இதனை பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?