சந்திரசேகர்: 15 வயதில் இஞ்சினியர், 17 வயதில் IIT பட்டம் - யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Twitter
Wow News

சந்திரசேகர்: 15 வயதில் இஞ்சினியர், 17 வயதில் IIT பட்டம் - யார் இந்த திருநெல்வேலிக்காரர்?

Antony Ajay R

சந்திரசேகர் சுப்பிரமணியன் 1990 செப்டம்பர் 25ல் பிறந்தவர். 2000களில் மொத்த உலகும் இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டது. ஏனென்றால் 17 வயதிலேயே இவர் எம்டெக் பட்டம் பெற்றிருந்தார். அதுவும் இந்திய பொறியியல் மாணவர்களின் கனவு கல்லூரியான ஐஐடியில்!

சந்திரசேகர் 15 வயதிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது இளம் பொறியியல் (BE) பட்டத்தைப் பெற்றிருந்தார். கிராஜுவேஷன் ஆப்டிடூட் டெஸ்டில் 99.32 மதிப்பெண்கள் கிடைத்ததால் அவருக்கு எளிதாகவே ஐஐடியில் சீட் கிடைத்தது. ஐஐடி மெட்ராஸில் தனது எம்டெக் வகுப்பில் முதலிடம் பிடித்தார் 

இவரது வளர்ச்சிக்கு டாடா குழுமத்தில் டிசிஎஸ் நிறுவனம் உதவி செய்திருக்கிறது. எளிதாக இவர் முதுநிலைப் பட்டத்தையும் பெற்றார்.

சந்திரசேகர் தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு ஆடிட்டர். தாய் கனரா வங்கியில் பணியாற்றிவந்தார்.

சிறுவயது முதலே தனது வகுப்பில் முதலிடம் பெற்றுவந்தார் சந்திரசேகர். பிற மாணவர்களை விட விரைவாக படித்து வீட்டுப்பாடங்களை முடித்துவிடுவாராம். இதனால் வகுப்பில் தொல்லையாக இருக்கிறார் என அவரது ஆசிரியர்கள் பெற்றோரிடம் வித்தியாசமான புகாரைச் சொல்வார்களாம்.

சந்திர சேகர் படிப்பில் மற்ற குழந்தைகளை விட பலமடங்கு திறமைசாலியாக இருப்பதை அவரது உறவினர் தான் முதன்முதலாக கண்டறிந்துள்ளனர். அவர் சந்திரசேகரை ஒரு சர்வதேச சான்றிதழ் திட்டத்தில் சேர்க்க கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது 11 வயதில் மைக்ரோசாப்ட் சான்றளிக்கப்பட்ட சிஸ்டம்ஸ் இஞ்சினியராகவும் சிஸ்கோ சான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் அசோசியேட்டாகவும் திகழ்ந்தார்.

2002 ஆம் ஆண்டில், அவர் தொழில்நுட்பம் மற்றும் தகவல் முன்னறிவிப்பு, மதிப்பீட்டு கவுன்சிலின் கெளரவ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

2012ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகத்தில் நிதி பொருளியல் பிரிவில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார். 2020ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுத் தொடர்பாக பிஹெச்.டி பட்டம் பெற மீண்டும் ஐஐடியில் இணைந்தார்.

சிறுவயதிலேயே தொடங்கிய அவரது தொழில் வாழ்க்கையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகவும், விஞ்ஞானியாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் புரோகிராம் மேனேஜர் மற்றும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2006ம் ஆண்டு ஒரு அமெரிக்க ஐடி பெருநிறுவனத்தில் சிலகாலம் இண்டர்ன்ஷிப் செய்துள்ளார்.

ஒருமுறை அவர் ஒரு நேர்காணலில், TCS இன் மூத்த தலைவர் ராமதுரை, தொழிலதிபர் ரத்தன் டாடா, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தனது இன்ஸ்பிரேஷன்கள் என்று கூறியிருக்கிறார்.

இப்போது சந்திரசேகர் மிஷின் லேர்னிங் சயிண்டிஸ்டாக இருந்துவருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?