Squirrels
Squirrels  Pexels
Wow News

அணில்தானே என்று நினைக்காதீர்கள் - அணில் பற்றிய இந்த ஐந்து ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

Govind

கையளவிலான அணில்கள் எனப்படும் கொறித்துண்ணிகள் பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் மரங்களில் உலகின் பல நாடுகளில் அடிக்கடி நம் கண்களுக்கு தட்டுப்படுகின்றன. ஆனால் அவற்றைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?

பஞ்சுபோன்ற வாலைக் கொண்ட நமது அணில் நண்பர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே!

1. 280க்கும் மேற்பட்ட அணில் இனங்கள் உள்ளன!

உங்களுக்கு அருகிலுள்ள ஒரு பூங்காவில் ஒரு பொதுவான சாம்பல் நிற அணில் கிளையிலிருந்து கிளைக்கு குதிப்பதை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பார்த்திருப்பீர்கள். ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இன்னும் நூற்றுக்கணக்கான இனங்கள் காணப்படுகின்றன.

மலபார் ராட்சத அணில் என்றும் அழைக்கப்படும் இந்திய ராட்சத அணில் மிகப்பெரியது, இது தலை முதல் வால் நுனி வரை 90 சென்டிமீட்டர் நீளத்தை எட்டும்!

உலகிலேயே சிறியது ஆப்பிரிக்க பிக்மி அணில், இது 12 சென்டிமீட்டர் நீளத்தை மட்டுமே அடையும்! உள்ளம் கொள்ளை போகும் அளவுக்கு அழகாக இருக்கும்!

2. அணில்கள் தமது பற்களை வளர்ப்பதை நிறுத்தாது

அணில்களுக்கு நான்கு பெரிய முன் பற்கள் உள்ளன, அவை வாழ்நாள் முழுவதும் வளரும்.

அவைகள் கொட்டைகள், விதைகள் மற்றும் பிற மரப் பொருட்களை சாப்பிடும்போது பற்கள் தேய்ந்து போவதைத் தடுக்கும்.

அணில்கள் சைவ உணவு உண்பவர்கள் அல்ல - அவைகள் பறவை முட்டைகள் மற்றும் குஞ்சுப் பறவைகளை கூட சாப்பிடுகின்றன. சில மரச் சாற்றை ஒரு சுவையான விருந்தாகவும் உண்கின்றன!

3. அணில்கள் தற்செயலாக புதிய மரங்களை நடுகின்றன

அணில் அடிக்கடி மறக்கும் உயிரினங்களாக இருக்கலாம்! ஆனால் உணவு கிடைப்பது கடினமாக இருக்கும் குளிர்ந்த மாதங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக அவை பெரும்பாலும் நிலத்தில் ஓக் மரத்தின் பழங்களான ஏகோர்ன்களை புதைக்கின்றன.

இருப்பினும், அவற்றில் 70% மட்டுமே மீட்கப்படுகின்றன. அதாவது மூன்றில் ஒரு பகுதி ஏகோர்ன்கள் புதிய ஓக் மரங்களாக வளர விடப்படுகின்றன!

4. சிவப்பு அணில் மற்றும் சாம்பல் அணில் ஒன்றாக வாழ முடியாது

இங்கிலாந்தில், மிகவும் பொதுவான சாம்பல் அணில்கள்தான் அதிகம். அரிதான சிவப்பு வகை அணில்களுக்கு சாம்பல் அணிகள் சற்று தொந்தரவாக உள்ளது. இந்த சிவப்பு நிற அணில் இங்கிலாந்தில் இருப்பதே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்!

சிவப்பு அணில்கள் இங்கிலாந்தின் பூர்வீக இனங்கள் மற்றும் சுமார் 10,000 ஆண்டுகளாக இங்கு வாழ்கின்றன. அதேசமயம், சாம்பல் நிற அணில்கள் 1800களில் அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

துரதிர்ஷ்டவசமாக, சாம்பல் நிற அணில்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதாலும் மற்றும் பெரிய, அதிக வலிமையான உடல்கள் காரணமாகவும் அவை சிறந்த உணவை முதலில் சாப்பிட முடிகிறது. மாறாக சிவப்பு அணில்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. எனவே அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இங்கிலாந்தில் சுமார் 1,40,000 சிவப்பு அணில் இருப்பதாகக் கருதப்படுகிறது சாம்பல் அணில்களின் எண்ணிக்கையோ 25 இலட்சம் உள்ளது.

பொதுவாக சாம்பல் அணில்களுக்கு தொற்றக் கூடிய பாக்ஸ் வைரஸ் சிவப்பு அணில்களுக்கு பரவி அவற்றைக் கொல்லக்கூடும். ஆனால் சாம்பல் நிற அணில்களுக்கு இந்த வைரஸால் பாதிப்பில்லை.

5. அணில்கள் சிறந்த தகவல் தொடர்பாளர்கள்

இனத்தைப் பொறுத்து, அணில்கள் பல்வேறு வழிகளில் தங்கள் "குரல்களை" பயன்படுத்துகின்றன.

நாய்களைப் போன்ற குரைப்பது, வாத்துக்களைப் போல குவா குவா என்று கீச்சுவது, பெரும் சப்தத்துடன் ஒலி எழுப்புவது, பன்றிகளைப் போல கத்துவது என்று ஒவ்வொரு வகை அணிலும் தமது தகவல் தொடர்புகளை பேணுகின்றன.

ஆனால் அணில்களுக்கு இடையே மிகவும் பொதுவான தகவல் தொடர்பு வடிவம் அவற்றின் பஞ்சுபோன்ற வால்களின் வழியாகவே நடக்கிறது.

அணில்கள் அவற்றை அடையாளக் கருவிகளாகப் பயன்படுத்துகின்றன. அச்சுறுத்தல்கள் குறித்து சந்தேகப்பட்டால் வாலினை இழுக்கின்றன.

அவற்றின் வால்களின் மற்றொரு பயன் என்னவென்றால், குளிர்ந்த, ஈரமான காலநிலையில் அவற்றைப் போர்த்திக் கொள்வதும் சூடாக வைத்திருப்பதும் ஆகும்.

மரத்திலிருந்து மரத்திற்கு தாவும்போது சமநிலையுடன் இருக்கவும் வால்கள் உதவுகின்றன.

ணில்கள் சுற்றுச்சூழலுக்கு முக்கியமான சிறு உயிரினம் ஆகும். பாருங்கள் நமது வாழ்வில் நாம் மரங்களை நட்டிருக்க மாட்டோம். ஆனால் காலநிலை பிரச்சினை அறியாத இந்த சிறு ஜந்து ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான மரங்கள் நடுவதற்கும் வளர்வதற்கும் காரணமாக இருக்கிறது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?