ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் 170 கேரட் தூய்மையான பெரிய பிங்க் நிற வைரம் கிடைத்திருக்கிறது. இது கடந்த 300 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகப் பெரிய வைரம் என்று வைரத்தை கண்டறிந்த நிறுவனம் கூறியுள்ளது.
The Lulo Rose என்று அழைக்கப்படும் இந்த வைரம் லுலோ சுரங்கத்தில் கிடைத்திருக்கிறது. Lucapa Diamond Company என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் இதனைக் கண்டறிந்தது. அங்கோலா அரசும் இந்த நிறுவனத்துடன் கூட்டணியாக செயல்படுகிறது.
மேலும் இது வைரங்களில் தூய்மையான IIa வகை வைரம் என்பது குறிப்பிடத்தக்கது.
IIa வகை வைரங்கள் மிகவும் தூய்மையானவை. பெரும்பாலும் நிறமற்றதாக அல்லது மிக லேசான நிறம் கொண்டதாக இருக்கும். இவை கிடைப்பது மிகவும் அரிது.
இந்த வைரம் சர்வதேச அளவில் ஏலம் விடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதற்கு முன்னர் அதனை வெட்டி பாலிஷ் செய்ய வேண்டியது அவசியம்.
பாலிஷ் செய்யும் செயல்முறையில் அதன் எடை பாதியாகக் குறையலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த மாதிரியான பிங்க் நிற வைரங்கள் எப்போதும் அதிக விலைக்கு விற்கப்படும். பாலிஷ் செய்து ஏலத்தில் விடும்போது தான் இதன் உண்மையான மதிப்பும் தெரிய வரும்.
உதாரணமாக 2017 ஹாங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில் 59.6 கேரட் வைரம் 71.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை போனது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரம் கிடைத்ததைத் தொடர்ந்து உலக அளவில் வைரம் அறுப்பு தொழிலில் அங்கோலா முக்கிய இடத்தில் இருப்பதாக பெருமிதம் கொண்டார் அந்த நாட்டின் கனிம வளத்துறை அமைச்சர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust