கட்டிப்பிடி வைத்தியம்  Twitter
Wow News

கட்டிப்பிடி வைத்தியம் : ஒரு மணிநேரத்துக்கு 7000 ரூபாய் - நிஜ வசூல் ராஜா

உண்மையில் நம் நண்பர்கள், உறவினர்கள் என கட்டிப்பிடி வைத்திய வல்லுநர்கள் பலர் நம்மை சுற்றியே இருப்பார்கள். இந்த கட்டிப்பிடி வைத்தியத்தையே முழுநேரத் தொழிலாக கொண்டிருக்கிறார் ஒரு நபர். ஒரு மணிநேர தெரப்பிக்கு 7000 ரூபாய் வசூல் செய்வாராம்.

Antony Ajay R

வசூல்ராஜா படத்தில் கமல்ஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் குறித்துப் பேசியிருப்பார். வாழ்வில் தயக்கத்துடன், தன்னம்பிக்கையற்று, விரக்தியடைந்த நிலையில் இருப்பவர்களை சில நிமிடங்கள் கட்டிப்பிடிப்பதன் மூலம் அவர்களுக்கு நேர்மறை உணர்வுகளைக் கொடுக்க முடியுமென்பது தான் கட்டிப்பிடி வைத்தியம்.

சினிமாவில் சரி, நிஜத்தில் எப்படி இது சரி வரும்? என சிந்தித்திருப்போம். உண்மையில் நம் நண்பர்கள், உறவினர்கள் என கட்டிப்பிடி வைத்திய வல்லுநர்கள் பலர் நம்மை சுற்றியே இருப்பார்கள்.

இந்த கட்டிப்பிடி வைத்தியத்தையே முழுநேரத்தொழிலாக கொண்டிருக்கிறார் ஒரு நபர். ஒரு மணிநேர தெரப்பிக்கு 7000 ரூபாய் வசூல் செய்வாராம்.

ட்ரெவர் ஹூடன் என்பது தான் அவர் பெயர். இவரை ட்ரெசர் என்றும் அழைக்கின்றனர். இவருக்கு கட்டிப்பிடி வைத்தியம் ( cuddle therapy ) தான் தொழில்.

இங்கிலாந்தில் உள்ள இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.

இவரது தெரப்பி வெறுமனையாக கட்டிப்பிடிப்பது மட்டுமல்ல, "தொடுதல் மூலம் ஒருவருக்கு அக்கறை, பாசம் மற்றும் நேர்மறை எண்ணத்தை ஊட்டுவதாகும்" என்கிறார் ட்ரெசர்.

தற்போதைய சூழலில் மிகவும் குறைந்து வரும் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தொழிலைத் தொடங்கியதாக ட்ரெசர் கூறியிருக்கிறார்.

எனினும் பலர் இதனை பாலியல் தொழில் போல கருதுவதாகவும் வருந்துகிறார்.

ஒரு தெரிபிஸ்டிடம் அவர்கள் 'கவனம் மற்றும் அக்கறை'தான் அதிகமாக எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

கடந்த மே 2022 முதல் இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் அவர், இதில் கொஞ்சம் கூட பாலியல் சார்ந்த ஈடுபாடுகள் இருக்காது என்றும் அவ்வாறு இருப்பது தோன்றினால் உடனடியாக தான் விலகுவதாகவும் கூறினார்.

இந்த தெரப்பியை இன்னும் பலர் புரிந்துகொள்ளவில்லை என்று கூறும் அவர் இது மனிதர்களிடையே கனெக்‌ஷனையும் நம்பிக்கையையும் வளர்க்கும் என்று கூறுகிறார்.

கட்டிப்பிடி வைத்தியத்தை காமெடி சீன் என நினைத்தால் அது தொழிலாக தொடங்கும் அளவு சக்தி வாய்ந்ததாக இருக்கிறதே? முத்தமிடுவதும் கட்டியணைப்பதும் வெறும் பாலியல் சார்ந்த விஷயங்கள் அல்ல, அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் கருவிகள் என்பதில் உறுதியாக இருக்கிறார் ட்ரெசர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?