மின்மினி பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனமலை காடு: சர்வதேச விருது வென்ற புகைப்படகலைஞர் சொல்வதென்ன? Twitter
Wow News

மின்மினி பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனைமலை காடு: சர்வதேச விருது வென்ற புகைப்படகலைஞர் சொல்வதென்ன?

லட்சக்கணக்கான நட்சத்திரங்களை ரசிக்கத் தொடங்கியவர் இரவு வானை ஆராயத் தொடங்கியுள்ளார். நட்சத்திரங்களோடு அதிக நேரம் செலவிட்டதே மின்மினி பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சிக்கும் அழைத்துச் சென்றுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

Antony Ajay R

உலக அளவில் 19 பேருக்கு கொடுக்கப்பட்ட லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயரிய விருதை 6 இந்திய புகைப்படக் கலைஞர்கள் தட்டிச் சென்றுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் முரளி என்பவரும் தான் எடுத்த அசத்தலான புகைப்படத்துக்காக இந்த விருதை வென்றுள்ளார். பொதுவாக காட்டுயிர் புகைப்பட கலைஞர்கள் உலகம் முழுவதும் உள்ள காடுகளில் சுற்றித் திரிந்து புகைப்படங்களை எடுப்பர்.

ஸ்ரீராம் ஆனைமலை மற்றும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் எடுத்த புகைப்படத்துக்காக விருதை வென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கோடையில் மழைக்கு பிறகு டாப்சிலிப் மற்றும் நெல்லியாம்பதி காட்டில் கோடிக்கணக்கில் மின்மினிப் பூச்சிகள் தென்படும்.

இந்த மின்மினிகளில் காடே ஒளிர்ந்திருக்கும்படியான ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். இதற்காக ‘நடத்தை: முதுகெலும்பில்லாத’ பிரிவில் "உலகின் சிறந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞர்" என்ற விருது அவருக்கு கிடைத்துள்ளது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஸ்ரீராம் முரளி, திருச்சியிலும் அமெரிக்காவிலும் படித்து கல்லூரி படிப்பை முடித்துள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அமெரிக்காவில் படிக்கும்போது அவருக்கு வானியல் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

லட்சக்கணக்கான நட்சத்திரங்களை ரசிக்கத் தொடங்கியவர் இரவு வானை ஆராயத் தொடங்கியுள்ளார். நட்சத்திரங்களோடு அதிக நேரம் செலவிட்டதே மின்மினி பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சிக்கும் அழைத்துச் சென்றுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2022ம் ஆண்டு மாலை 5 மணி அளவில் உலாந்தி காட்டுக்குள் சென்றிருக்கின்றனர். 2 மணி நேரத்துக்கும் அதிகமான காத்திருப்புக்கு பிறகு அந்த அதிசயமாக காடு ஒளிரத்தொடங்கியிருக்கிறது.

பெண் பூச்சிகளைக் கவருவதற்காக ஆண் பூச்சிகள் ஒளியை சுமந்து பறந்திருக்கின்றன. அந்த மலைக்கவைக்கும் காட்சியை படமாக்கியிருக்கிறார் ஸ்ரீராம் முரளி.

இந்த புகைப்படம் குறித்து அவர், "காட்டைப் பாதுகாக்கவும், மக்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயன்படும்" எனக் கூறியுள்ளார்.

கூகுளில் வேலையை விட்டுவிட்டதால் இனி முழுநேரமாக மின்மினி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் மின்மினி பூச்சிகாளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இயற்கையின் இந்த அதிசய உயிரினங்களை எதிர்கால சந்ததியினரும் பார்த்திட இவற்றைக் காக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீராம் முரளி.

ஸ்ரீராம் முரளியுடன் இன்னும் 5 இந்தியர்கள் அந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது நம் நாட்டுக்கு பெருமை மிக்க தருணமாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?