Ship Pexels
Wow News

கோவா டூ ஜெர்மனி : 43 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மர்மக் கப்பல் - விடை தெரியாத புதிர்

இந்த விஷயத்தை கப்பலில் பயணித்த மாலுமிகளின் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. கப்பலில் ரேடார் சாதனம் ஒழுங்காகச் செயல்படவில்லை, இருப்பினும் மாலுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டு பயணத்தை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினர்.

Gautham

மனித குல முன்னேற்றத்தில் அறிவியலுக்கு அதீத பங்கு உண்டு. ஆனால் சில விஷயங்கள் அறிவியலால் கூட விளக்க முடிவதில்லை.

உதாரணத்துக்கு "முன் ஜென்மத்தில் பெற்ற குழந்தையை அடையாளம் கண்டு கண்ணீர் விட்ட பெண் - சாந்தி தேவியின் கதை"-யைக் கூறலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன எம் ஹெச் 370 விமானத்துக்கு என்ன ஆனது என இன்று வரை எவருக்கும் தெரியவில்லை.

அப்படி 1970களின் இறுதியில் நிகழ்ந்த மற்றொரு மர்மமான விஷயம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு ராட்சத சரக்குக் கப்பல் மாயமானது. அதிலிருந்த மாலுமிகள் 43 பேருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கேரளா ஷிப்பிங் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனம் 'ஆஸ்கர்ஸ்கார்ட்' என்கிற 1966ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நார்வேயில் கட்டமைக்கப்பட்ட கப்பலை விலை கொடுத்து வாங்கியது.

இந்த கப்பல் ஒரு ராட்சத சரக்குக் கப்பல். அக்கப்பலை பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து, எம் வி கைராலி என பெயரிட்டு வியாபாரத்தைத் தொடங்கியது. 1979ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவா மாநிலத்தில் உள்ள மார்கோ (Margao) துறைமுகத்திலிருந்து ஜெர்மனி நாட்டில் உள்ள ராட்ஸ்டாக் (Rostock) நகரத்துக்கு, டிஜிபூட்டி நகரம் வழி செல்வதென திட்டமிடப்பட்டு இருந்தது.

அக்கப்பலை இயக்க 43 மாலுமிகள் பணியிலிருந்தனர். கப்பலின் கேப்டனாக கேரளத்தைச் சேர்ந்த மரியதாஸ் ஜோசஃப் வழிநடத்தினார். அக்கப்பலில் சுமார் 20,538 டன் இரும்புத் தாது ஏற்றப்பட்டு இருந்தது. கைராலி கப்பலையும், மாலுமிகளையும் உலகம் கடைசியாகப் பார்த்தது அப்போது தான்.

கப்பல் 1979 ஜூன் 30ஆம் தேதி மார்கோ நகரத்திலிருந்து புறப்பட்டது கைராலி. ஜூலை 3ஆம் தேதி பாம்பே ரேடியோவைப் பயன்படுத்தி கடைசியாக அக்கப்பலிடமிருந்து செய்தி பரிமாறிக் கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு, அக்கப்பலிலிருந்து எந்தவித தொடர்பும் கிடைக்கவில்லை.

1979 ஜூலை 8ஆம் தேதி டிஜிபூட்டியில் எரிபொருளை நிரப்பிக் கொள்ள எம் வி கைராலி கப்பல் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் கப்பலைக் காணவில்லை. சுமார் மூன்று நாட்கள் கழித்து, டிஜிபூட்டியில் இருந்த முகவர்கள், கேரளா ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு கப்பலைக் காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து தான் கேரள நிறுவனம் தங்களின் கப்பலைக் காணவில்லை என ஒப்புக் கொண்டது.

இந்திய கப்பற்படை 1979 ஜூலை 16ஆம் தேதி எம் வி கைராலி கப்பலைத் தேடும் பணியில் ஈடுபடத் தொடங்கியது. பல தின தேடுதலுக்குப் பிறகும் கைராலி கப்பல் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் இந்திய கப்பற்படை தன் தேடுதலை நிறுத்திக் கொண்டது.

கப்பல் கோவாவில் உள்ள மார்கோ நகரத்திலிருந்து சுமார் 500 மைல் தொலைவில் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.

இந்த விஷயத்தை கப்பலில் பயணித்த மாலுமிகளின் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. கப்பலில் ரேடார் சாதனம் ஒழுங்காகச் செயல்படவில்லை, இருப்பினும் மாலுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டு பயணத்தை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினர்.

எம் வி கைராலியின் கேப்டன் மரியதாஸ் கோசஃப் தன் மனைவி மரியகுட்டிக்கு எழுதிய கடிதத்தில், கப்பலின் ரேடார் கருவி சரியாக வேலை செய்யவில்லை என்றும், அது சரி செய்யப்பட்ட பிறகு, ஜூலை 4ஆம் தேதிதான் மீண்டும் கப்பலில் பயணிக்க இருப்பதாகக் 1979 ஜூன் 26 ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தார். இதை ஒரு பெரிய ஆதாரமாக வைத்து மாலுமிகளின் உறவினர்கள் கொந்தளித்தனர், கேரளா ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டினர்.

ரேடார் கருவி சரி செய்யப்படாமலேயே ஜூன் 30ஆம் தேதி மாலுமிகள் பயணிக்க கேரளா ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனம் கட்டாயப்படுத்தியதாக உறவினர்கள் கூறினர்.

அதோடு, எம் வி கைராலி போன்ற ராட்சத சரக்குக் கப்பல் எந்த வித தடயத்தையும் விட்டுவைக்காமல் கடலில் மூழ்கிவிட்டது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உறவினர்கள் கோபப்பட்டனர்.

மற்றொரு தரப்போ கைராலி கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம், மாலுமிகள் பணையக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம், கப்பலிலிருந்த பொருட்களை எல்லாம் சூறையாடிய பிறகு அக்கப்பலை எடைக்குப் போட்டிருக்கலாம் என்று கூறினர்.

மற்றொரு தரப்பு, கப்பலில் ஏற்றி வந்த இரும்புத் தாது ஈரத்தன்மையால் நீராக மாறி இருக்கலாம். இதை ஆங்கிலத்தில் Iron ore liquefaction என்பர். இரும்புத் தாது நீராக மாறியதால் அதிக எடை காரணமாக ஒட்டுமொத்த கப்பலையும் மூழ்கடித்து இருக்கலாம் என்றும் கூறினர்.

எம் வி கைராலி கப்பல் இப்போதும் கடலுக்கு அடியில் இருக்கிறதா? கொள்ளையர்கள் கடத்திவிட்டார்களா? அந்த 43 பேருக்கு என்ன ஆனது? எந்த கேள்விக்கும் யாரிடமும் ஒரு சரியான விடையில்லை.

இப்படி நம் உலகின் கடற்பரப்புகளில், இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல மர்மங்கள், மர்மமாகவே தொடர்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?