இசை Pexels
Wow News

Stress -ஐ குறைக்க உலகிலேயே சிறந்த பாடல் இது தான் - அறிவியல் சொல்வது என்ன?

நம் அன்றாடத்தில் வந்து சேரும் ஸ்ட்ரெஸ்ஸைத் துடைத்தெற்றிய நாம் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் பாடல்கள் தான். இது தான் உலகிலேயே அதிகபட்சமாக நம்மை ரிலாக்ஸ் செய்யக் கூடிய பாடல் என ஒன்றை அறிவியல் கூறுகிறது.

Antony Ajay R

தினமும் காலையில புத்துணர்ச்சி பெற பாடல்களைக் கேட்கத் தொடங்குவோம். இனி அந்த நாளில் வரும் மகிழ்ச்சி, துக்கம், பயம், நம்பிக்கை, உத்வேகம் அத்தனைக்கும் பாடல்கள் தான் துணை.

இசை நம் வாழ்வோடு ஒன்றியது. பாடல்களை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் குறைந்த பட்சம் தூங்கும் போது மட்டுமாவது இசையை நாடுவார்கள்.

நம் அன்றாடத்தில் வந்து சேரும் ஸ்ட்ரெஸ்ஸைத் துடைத்தெற்றிய நாம் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் பாடல்கள் தான். ஆனால் ஏனோ இந்த பாடல் எல்லாருக்கும் மன அழுத்தத்தைப் போக்கும் என ஒன்றைப் பொதுவாக சொல்லிவிட முடிவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இசை ருசிக்கலாம்.

இருப்பினும் இது தான் உலகிலேயே அதிகபட்சமாக நம்மை ரிலாக்ஸ் செய்யக் கூடிய பாடல் என ஒன்றை அறிவியல் கூறுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த மார்கோனி யூனியன் என்ற குழுவின் வெயிட்லஸ் பாடல் தான் அந்த பாடல் என நரம்பியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வை நடத்துவதற்காக தன்னார்வலர்களை அழைத்துள்ளனர். அவர்களுக்கு மிகவும் கடினமான புதிர்களைக் கொடுத்திருக்கின்றனர். அப்போது அவர்களை சென்சார் மூலம் கண்காணித்து இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், மூளை செயல்பாடுகளை குறித்து வைத்தனர்.

கடினமான புதிர்கள் அவர்களின் மன உளைச்சலை அதிகரித்திருந்தன.

இங்கிலாந்தைச் சேர்ந்த மைண்ட்லேப் ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியை நடத்தியவர்களில் ஒருவரான டேவிட் லிவிஸ் என்பவர், "வெயிட்லெஸ்" என்ற ஆங்கில இசை மற்ற இசைகளை விட மன அமைதியைத் தருவதாக கூறினார்.

வார்த்தைகளே இல்லாத அந்த இசை நம் பதட்டத்தை 65 விழுக்காடு வரை குறைக்கிறதாம்.

தூங்க வைக்கும் பாடல்

இந்த இசையின் மாயாஜாலங்கள் எப்படி நடக்கிறது? பிரிட்டிஸ் அகடமி ஆஃப் சவுண்ட் அண்ட் தெரபி நிறுவனர் லைஸ் கூப்பர் கூற்றுப்படி, "இந்த இசை நிமிடத்துக்கு 60 பீட்கள்(துடிப்பு) என்ற விகிதத்தில் தொடங்கி 50 பீட்கள் எனக் குறைகிறது.

இதனைக் கேட்கும் போது நம் இதயத்துடிப்பும் பாடலின் துடிப்புக்கு ஏற்ப குறைகிறது. இதனால் இரத்த அழுத்தமும் குறைந்து நாம் ரிலாஸாக உணர்கிறோம். ஒரு பாடல் நம்முள் நிகழ்த்தும் இந்த நிகழ்வுக்கு தான் "Entertainment" என்று பெயர். இந்த பாடல் எளிதாக நம்மை உறக்கத்துக்கு அழைத்துச் செல்ல வல்லது.

இந்த பாடல் மன அமைதியைத் தருவதற்காகவே உருவாக்கப்பட்டது. இசைக்குழு மற்றும் சவுண்ட் தெரபிஸ்ட் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.

மியூஸிக் தெரப்பியை இதுவரை முயற்சிசெய்து பார்த்ததில்லை என்றால் இதோ வெயிட்லெஸ்ஸ் இசையைக் கேளுங்கள்...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?