Scooby Doo ட்விட்டர்
Wow News

Scooby Dooவில் ஓரினச் சேர்க்கையாளர் கதாபாத்திரம்; முன்பே கணித்த ரசிகர்கள்?

Keerthanaa R

பிரபல கார்ட்டூன் நிகழ்ச்சியான ஸ்கூபி டூவில் இடம்பெற்றுள்ள வெல்மா என்ற கதாபாத்திரம் ஓரினச்சேர்க்கையாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள்.

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் கார்ட்டூங்களில் ஒன்று ஸ்கூபி டூ, வேர் ஆர் யூ? நிகழ்ச்சி. ஒரு நாயும், 4 நண்பர்களையும் கொண்டு எழுதப்பட்ட நகைச்சுவை டிடெக்டிவ் சீரீஸ் இது. பதின் பருவத்தில் இருக்கும் இந்த நண்பர் கூட்டம், மர்மங்கள், அமானுஷ்யங்கள் நிறைந்த சுவரஸ்யமான முடிச்சுகளை அவிழ்க்கும் கூட்டணி. இவர்கள் எப்போதும், ஒரு பச்சை நிற வேனில் தான் பயணிப்பார்கள். அதில், தி மிஸ்டரி மெஷின் (The Mystery Machine) என எழுதப்பட்டிருக்கும்

பெரும்பாலும், ஸ்கூபி டூ எனப்படும் அவர்களின் நாய் தவறுதலாக எங்காவது மாட்டிக்கொள்ளும். அப்படிதான் இவர்களது கைகளில் புதிய கேஸ் ஒன்று கிடைக்கும். இந்த ஸ்கூபி டூ தி க்ரேட் டேன் வகை நாய். மேலும் இது பேசும் திறன் கொண்ட நாயும் கூட!

மிகவும் பயங்கொள்ளி நாயாக அதை தயாரிப்பாளர்கள் சித்தரித்திருப்பார்கள். 1969 முதல், தற்போது வரை கார்ட்டூன் உலகை ஆண்டுக்கொண்டிருக்கிறது ஸ்கூபி டூ.

காலத்திற்கு ஏற்ப, நிகழ்ச்சியில் அவ்வப்போது மாற்றங்களை செய்துவந்தனர். இந்நிலையில், இந்த டிடெக்டிவ் நண்பர் கூட்டத்தில் ஒரு கதாபாத்திரம் ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

கதாபாத்திரங்கள்:

ஷாகி ரோஜர்ஸ், பிரெட் ஜோன்ஸ், ஸ்கூபி-டூ, வெல்மா டின்க்லி மற்றும் டாஃப்னீ பிளேக்.

இவர்களில் வெல்மா டின்க்லி என்ற கதாபாத்திரம் தான் தற்போது லெஸ்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலோவீனை முன்னிட்டு வெளிவரவிருக்கும் டிரிக் ஆர் டிரீட் ஸ்கூபி டூ (Trick or Treat Scooby Doo) திரைப்படத்தின் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த காட்சியில், வெல்மா தன் தோழி டாஃப்னீயிடம் கோகோ டைப்லோ என்ற பெண் மீது தனக்கு கிரஷ் இருப்பதாக கூறுவார்.

இந்த காட்சி தற்போது இணையவாசிகளை மிகவும் கவர்ந்துள்ளது. ஸ்கூபி டூ கார்ட்டூனை விடாமல் பார்த்து வந்தவர்கள் அனைவருமே அவ்வப்போது வெல்மா ஓரினச்சேர்க்கையாளராக இருக்கக்கூடும் என கூறிவந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சில நாட்களாக மறைமுகமாக அதனை தெரிவித்து வந்தனர்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தில், இந்த ரகசியத்தை தயாரிப்பாளர்கள் வெளியிட்டதில் சமூக வலைத்தளங்களில் பேராதரவு பெற்று வருகிறது நிகழ்ச்சி. கூகுள் நிறுவனமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

கூகுளில் வெல்மா என தேடினால், Pride Monthஐ குறிக்கும் வண்ணம் கன்ஃபெட்டிகள் (confetti) பறப்பதுபோல மாற்றியமைத்திருக்கிறது நிறுவனம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?