2023ல் வளர்ந்துவரும் 8 தொழில்நுட்பங்கள் - நம் வாழ்வை எப்படி மாற்றும்?

செயற்கை நுண்ணறிவு முதல் புதியவகை பேட்டரிகள் வரை இந்த தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை அடுத்த 5 ஆண்டுகளில் பெருமளவில் மாற்றக் கூடும் எனக் கூறப்படுகிறது.
2023ல் வளர்ந்துவரும் 8 தொழில்நுட்பங்கள் - நம் வாழ்வை எப்படி மாற்றும்?
2023ல் வளர்ந்துவரும் 8 தொழில்நுட்பங்கள் - நம் வாழ்வை எப்படி மாற்றும்? Twitter
Published on

உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023ல் வளர்ந்து வரும் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை அடுத்த 5 ஆண்டுகளில் பெருமளவில் மாற்றக் கூடும் எனக் கூறப்படுகிறது.

நிலையான விமான எரிபொருள் முதல் மனிதர்களைப் போல புதுமைகளை படைக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு வரை அறிக்கையில் கூறப்பட்டுள்ள டாப் 10 தொழில்நுட்பங்கள் குறித்துப் பார்க்கலாம்.

உலக பொருளாதார மன்றம் மற்றும் ஃப்ரண்ட்யியர்ஸ் ஃபோரம் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பங்கள் பல துறைகளில் ஏற்படவுள்ள வியத்தகு மாற்றங்களை முன்னறிவிக்கின்றன.

வளையக்கூடிய பேட்டரிகள்

பேட்டரிகளில் புதிய வடிவங்களை உருவாக்க பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. எலட்ரிக் கார்கள் முதல் மொபைல் ஃபோன்கள் வரை நாளைய உலகில் நமக்கு முக்கியத் தேவையாக இருக்கக் கூடிய பொருட்கள் ஒவ்வொன்றும் பேட்டரிகளை நம்பி தான் இருக்கின்றன.

இப்போது நடக்கும் ஆய்வுகள் வெற்றிகரமாக வளையும் பேட்டரிகளை உருவாக்கும் என்கின்றனர். இந்த பேட்டரிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், பயோமெடிக்கல் சென்சார்கள், வளையக்கூடிய டிஸ்பிளேகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் பயன்படுத்தப்படலாம்.

ஜெனரேடிவ் ஏஐ

புதிய கண்டெண்ட்களை உருவாக்கக் கூடிய ஏஐ-கள் இன்னும் சில ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சி பெறும். இப்போது இருக்கக் கூடிய சேட் ஜிபிடி, கூகுள் பார்ட் மற்றும் டால்-இ எல்லாம் உதாரணங்கள்.

இவை ஏற்கெனவே இருக்கக் கூடிய தகவல்களை இணைத்து கண்டென்களை உருவாக்குகின்றன. இவை சுயமாகவும் கண்டெண்ட்களை உருவாக்கும் விதத்தில் மேம்படும் எனக் கூறப்படுகிறது.

நிலையான விமான எரிபொருள்

காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளால் நாம் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு முக்கிய காரணமான கார்பன் உமிழ்வுக்கு விமான போக்குவரத்து துறை முக்கிய காராணமாக இருக்கிறது.

இதிலிருந்து மீள நிலையான விமான எரிபொருள் (Sustainable Aviation Fuel) உற்பத்தி செய்வதில் விமான நிறுவனங்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.

வடிவமைக்கப்பட்ட பேஜ்கள் (Designer Phages)

பேஜ்கள் என்பவை குறிப்பிட்ட பாக்டீரியாக்களை தேர்ந்தெடுத்து தாக்கும் வைரஸ்கள். இவை அதிநவீன மரபு பொறியல் சாதனங்களைக் கொண்டிருக்கும். 

அறிவியலாளர்கள் தாங்கள் விரும்பும் பாக்டீரியாக்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழிக்கும் பேஜ்களை உருவாக்கி வருகின்றனர். இவற்றை தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களிலும் பயன்படுத்த முடியும்.

மனநலத்துக்கான மெட்டாவர்ஸ்

விர்சுவல் ஸ்பேஸ்களைப் பகிர்ந்துகொள்வது இப்போது நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். ஆனால் குரலை கேட்பது, வீடியோவை லைவாக பார்பது தான் இப்போது நம்மால் முடிகிறது.

 இதனை நவீன உடைகளை மாட்டிக்கொண்டு ஆன்லைன் மூலம் தொடுதலையும் உணரும் வகையில் உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் நாம் எமோஷனலாக இருக்கும் போது உடல் ரீதியாகவும் ஒருவருடன் தொடர்பில் இருக்கலாம்.

ஏற்கெனவே சீனாவில் தூரத்தில் இருப்பவருக்கு முத்தமிடும் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாவரங்கள் மாட்டிக்கொள்ளும் சென்சார்கள்

நம் ஸ்மார்ட் வாட்ச் மூலம், இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. இதேபோல தாவரங்களில் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் ஊட்ட சத்துகள் பற்றி அறிந்துகொள்ள சென்சார்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

2023ல் வளர்ந்துவரும் 8 தொழில்நுட்பங்கள் - நம் வாழ்வை எப்படி மாற்றும்?
கனவுகள்: நாம் ஏன் கனவு காண்கிறோம்? - அறிவியல் சொல்வது என்ன?

ஸ்பீசியல் ஓமிக்ஸ் (Spatial Omics)

இது செல்கள் மற்றும் மூலக்கூறுகளில் நடைபெறும் உயிரியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாக பார்ப்பதற்கு நுண்ணிய அளவில் பார்பதற்கு உதவும். 

இதுவரை நம்மால் தெரிந்துகொள்ள முடியாத உயிரியல் நிகழ்வுகளைக் காண்பதன் முலம் நோய்களுக்கு எளிதாக தீர்வு காண முடியலாம். 

2023ல் வளர்ந்துவரும் 8 தொழில்நுட்பங்கள் - நம் வாழ்வை எப்படி மாற்றும்?
நம் முன்னோர்கள் சக மனிதர்களை சாப்பிட்டனரா? - அறிவியல் கூறுவதென்ன?

ஃப்ளெக்ஸிபல் நியூரல் எலக்ட்ரானிக்ஸ் (Flexible Neral Electronics)

இந்த நரம்பியல் தொழில்நுட்பத்தின் மூலம் மனித மூளையை கணினியுடன் நேரடியாக இணைக்க முடியும். இதனால் வலிப்பு, பக்கவாதம் மற்றும் மனநல பிரச்னைகளுக்கு தீர்வுகாணலாம்.

மேலும் 2023க்குள் செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய மருத்துவமனைகள் வரும் எனக் கூறப்படுகிறது.

2023ல் வளர்ந்துவரும் 8 தொழில்நுட்பங்கள் - நம் வாழ்வை எப்படி மாற்றும்?
AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com