கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான டயர் 5 நிறுவனத்தின் இணை நிறுவனரான அனுகிதா நந்தியின் கதையை சுவாரஸ்யமானது.
இவரது கணவர் ஜின் வான் ஒரு அமெரிக்கர். 2015ம் ஆண்டு பிற வணிகங்களுக்கு பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்கினர்.
இப்போது கொல்கத்தாவின் உப்பு ஏரி பகுதியில் இருக்கும் இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் இவர்கள் ஆரம்பம் மிகவும் சாதாரணமானதாக சிறியதாக இருந்தது.
மேற்குவங்கம் மாநிலம் புர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தி. பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாத மிடில்-கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் சிறுவயதில் இருந்தே தனது சொந்த பிசினஸைத் தொடங்கவேண்டும் எனப் பெரிய கனவைக் கண்டார்.
கல்லூரியில் படிக்கும்போதே மென்பொருள்கள் செய்யத் தொடங்கினார். இஞ்சினியரிங் படித்த அவர், 2015ம் ஆண்டு தனது சொந்த நிறுவனத்தை நிறுவினார். இன்றுவரை அந்த நிறுவனத்தில் 1500க்கும் மேலான கஸ்டமர்கள் உள்ளனர்.
இப்போது இந்த நிறுவனத்துக்கு அமெரிக்காவிலும் தலைமையகம் உள்ளது. 8 வருடத்தில் ஒரு சிறிய நிறுவனத்தை வளர்த்தெடுத்தவராக பலதரப்புகளில் இருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
சிறுவயதில் இவர் பெங்காலி மீடியம் பள்ளியில் தான் படித்தாராம். தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து மென்பொருள் செய்து விற்றுவந்தவர் வியாபாரம் குறித்து பெரிய அளவில் யோசிக்கத்தொடங்காமல் இருந்தார்.
அந்த நேரத்தில் பணி விஷயமாக இந்தியா வந்த ஜின் வானை டிண்டர் டேட்டிங் செயலியில் பார்த்துள்ளார். இருவரும் பழகியிருக்கின்றனர். இஞ்சினியரான ஜின் வான் இவரது வணிகத்தில் ஆர்வம் காட்டியுள்ளார். இருவரும் நிறுவனத்தை உருவாக்கினர்.
2015ல் இருந்து ஒன்றாக பணியாற்றினாலும் 2021ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
வான் வணிகத்தில் பங்கெடுத்த பின்னர் மென்பொருள்களை விற்காமல் மற்ற நிறுவனங்கள் சப்ஸ்கிரைப் செய்து உபயோகப்படுத்தும் படியாக சேவையை மாற்றினர்.
இதனால் இவர்களது வருமானம் அதிகரித்திருக்கிறது. இப்போது 25 மென்பொருள் சேவைகளை வழங்குகின்றனர்.
2021 நிலவரப்படி அவர்களது நிறுவனத்தின் மதிப்பு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். இப்போது 100 கோடி இருக்கும் எனக் கருதுகின்றனர். ஆண்டுக்கு 9 கோடி வருமானம் ஈட்டுகிறது.
2015ல் நிறுவனம் தொடங்கப்பட்ட போது இரண்டு வாடாகைக்கு எடுக்கப்பட்ட கம்பியூட்டர்கள், ஒரு டெவலப்பர் மற்றும் ஒரு HR மட்டுமே இருந்தனர். இப்போது 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust