கொரோனா லாக்டவுனுக்கு பிறகு நம் ஊரிலும் கேமிங் ஒரு பெரிய ஆன்லைன் பொழுதுபோக்கு தொழிலாக மாறியிருக்கிறது.
கிட்டத்தட்ட அனைத்து வாண்டுகளும் பப்ஜீ, ஃப்ரீ ஃபயர், வோலொரண்ட் என கேம்கள் விளையாடவும், ஆன்லைனில் மற்றவர் விளையாடுவதைப் பார்க்கவும், லைவாக யூடியூபில் ஸ்ட்ரீமிங்கும் செய்தனர்.
இப்படி, 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் கேம் ஸ்ட்ரீமிங் செய்வது நார்மல் தான். ஆனால் 40 வயதைக் கடந்த ஒரு பெண் கேமராக இருப்பது உங்களுக்கு தெரியுமா?
வீட்டுவேலைகள் செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி லாக்டவுனில் புரொஃபஷனல் கேமராக மாறி மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
ரீத்து ஸ்லதியா என்பது அவரது பெயர். ஜம்முவில் இவர் புகழ்பெற்ற யூடியூபராகவும் கேமராகவும் இருக்கிறார். 2020ல் லாக்டவுட் அமல்படுத்தப்பட்டபோது ரீத்துவின் மகன் அவருக்கு கேமிங் பற்றி தெரியப்படுத்தியுள்ளார்.
ஆன்லைனில் கேமிங் விளையாடுவதும், கேம் விளையாடும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் பிடித்துப்போக ஒரு தொழில்முறை கேமராக மாறியியிருக்கிறார் ரீத்து.
பொதுவாக இந்திய சமூகத்தில் ஆண்கள் மட்டுமே கேமிங்ஹ் போன்ற கவர்ச்சியான துறைகளில் பங்கெடுப்பர். அதிலும் 40களைக் கடந்தவர்கள் அதைப் பற்றி நினைத்துக்கூட பார்ப்பது கிடையாது.
ஆனால் பழமைவாதங்களை உடைத்து 45 வயதிலும் சொந்த கேமிங் இணையம் மற்றும் யூடியூப் சேனலில் கலக்கி வருகிறார் ரீத்து.
கேமிங் உலகில் இவருக்கு Blackbird என்று பெயர். இவருக்கு 3.5 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். கேமிங்கில் ரீத்துவால் ஆண்டுக்கு 1.2 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடிகிறது.
"பணம் குறைவாகத் தோன்றினாலும், அது எனக்குக் கொடுத்த நம்பிக்கையும் தைரியமும் மிகப்பெரியது. கேம் லாபியில் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களுடன் பழக விரும்புகிறேன். இது உத்வேகமாக இருக்கிறது" என அவர் பெட்டர் இந்தியா தளத்தில் கூறியுள்ளார்.
ஒரு நாளில் 3-4 மணி நேரம் வரை கம்பியூட்டர் முன்னால் அமர்ந்து கேம் விளையாடுகிறார் ரீத்து. இவர் ஆரம்பத்தில் லூடோ, கேண்டி கிரஷ் போன்ற விளையாட்டுகளையே பெரும்பாலும் விளையாடினார். இப்போது மகனின் உதவியுடன் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளைக் கூட விளையாடத் தொடங்கிவிட்டார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust