பயணம் செய்ய வயது ஒரு தடையில்லை என்பதை எடுத்துரைக்கும் விதமாக 81 வயதில் இருக்கும் 2 தோழிகள் உலகம் முழுவதும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
81 வயது முதியவர்கள் இருவரும் 80 நாட்களில் ஏழு கண்டங்களில் உள்ள 18 நாடுகளுக்கு பயணம் செய்து இணையத்தை கலக்கி வருகின்றனர்.
சர்வதேச ஆவணப் புகைப்படக் கலைஞரான எல்லி ஹம்பி மற்றும் மருத்துவரான சாண்டி ஹேசிலிப் ஆகிய இருவரும் 23 ஆண்டு கால நண்பர்கள் ஆவார்கள்.
ஏழு கண்டங்களையும் சுற்றிப்பார்க்க கிளம்பி சரியாக 80 நாட்கள் கழித்து இருவரும் தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ்ஸுக்கு திரும்பியிருக்கின்றனர்.
எல்லி ஹம்பி மற்றும் சாண்டி ஹேசெலிப் ஜனவரி 11 அன்று டல்லாஸிலிருந்து அர்ஜென்டினாவின் உஷுவாயாவுக்கு சென்று அங்கிருந்து தங்களின் சாகசத்தைத் தொடங்கினர்.
தங்களின் 80வது பிறந்தநாளைக் கொண்டாட நண்பர்கள் இருவரும் 80 நாட்களில் உலகைச் சுற்றி வரவும், ஏழு கண்டங்கள் மற்றும் 18 நாடுகளுக்குச் செல்லவும் முடிவு செய்தனர்.
அவர்களின் பயணம் இதுவரை ஏறக்குறைய மூன்று மாதங்களை கடந்த நிலையில் ஹம்பி மற்றும் ஹசெலிப் எகிப்தில் ஒட்டகங்களில் சவாரி செய்தனர், ஈஸ்டர் தீவு போன்ற சில பிரபலமான சுற்றுலா இடங்களுக்கு சென்றுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் சீனப் பெருஞ்சுவர் மற்றும் மச்சு பிச்சு மலை என கிட்டத்தட்ட உலகின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் தாஜ்மஹால் மற்றும் செங்கோட்டை போன்ற இந்தியாவின் மிகச்சிறப்பான நினைவுச்சின்னங்களையும் பார்வையிட்டனர்.
ஒரு வலைப்பதிவின் படி, அவர்களின் இந்த பயண திட்டத்தில் ஆடம்பரமான ஹோட்டல்கள், ஆடம்பர உணவுகளை சேர்க்கவில்லை.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
இப்போது, 81 வயதில், நாங்கள் இந்த கனவை நிறைவேற்றியுள்ளோம். இதை எப்படி செய்கிறோம் என்று நீங்கள் நினைத்தால், "நாற்காலியில் உட்கார்ந்து வாழ்க்கையை வீணாக்காதீர்கள், இந்த இனிமையான நேரத்தை பயன்படுத்தாமல் விட்டால், அந்த அழகான தருணங்களை இழந்துவிடுவீர்கள்" என்று ஹஸெலிப் கூறியிருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust