பங்குச்சந்தை : சென்செக்ஸின் தடாலடி வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? | Explained

இப்போதைக்கு ஆர்பிஐ தன் வட்டி விகிதங்களை அதிகரிக்கவில்லை என்றாலும், காலப் போக்கில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதையே இது மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.
Stock Market Crash
Stock Market Crashtwitter
Published on

இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளில் ஒன்றான சென்செக்ஸ், நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு கடும் வீழ்ச்சியில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் இன்று காலை 57,338 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது சுமாராக 56,985 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

இது முந்தைய வர்த்தக நாளில் நிறைவடைந்த 58,338 புள்ளியை விட சுமார் 1,350 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. சதவீதத்தில் பார்த்தால் சுமார் 2.3% வீழ்ச்சி.

sensex
sensex Twitter
Stock Market Crash
டைம் ட்ராவல் சாத்தியம் : அமெரிக்காவின் ரகசிய ஆவணம் கூறுவது என்ன? - வியக்க வைக்கும் தகவல்

இந்தியப் பங்குச் சந்தை இப்படி ஒரு பெரிய சரிவை எதிர்கொள்ள வேண்டிய காரணம் என்ன?

தொடர்ந்து உலக அரங்கைப் பல அதிர்வலைகளுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் உக்ரைன் - ரஷ்யா போர், அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் எரிவாயு மீது விதித்திருக்கும் தடை தொடர்பாக நிலவும் பிரச்சனைகள், ரஷ்யக் கச்சா எண்ணெய் மீதான சில தடைகள் ஆகியவை இந்தியப் பங்குச் சந்தையைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன.

இது போக பொதுவாகவே உலக அரங்கில் பணவீக்கம் குறித்த கவலையும் அதிகமாகவே இருக்கின்றன. அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், தன் அடிப்படை வட்டி விகிதத்தை விரைவாகவும், வேகமாகவும் உயர்த்தலாம் என்கிற கவலையும் இந்தியச் சந்தையைப் பீடித்திருக்கிறது.

அமெரிக்காவில் அடிப்படை வட்டி விகிதம் தடாலடியாக அதிகரித்தால், இந்தியச் சந்தையில், வெளிநாட்டு ஃபோர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கும் பணம் அதிவிரைவாக வெளியேறலாம், ஆகையால் இந்தியா போன்ற சந்தையில் ஒரு வித அழுத்தம் நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

stock market
stock marketTwitter
Stock Market Crash
Twitter CEO பராக் முதல் ISRO சிவன் வரை; IIT -ல் படித்து உச்சத்தை எட்டிய 10 பேர்

அடுத்து இந்தியச் சந்தைக்கு என்ன?

பூகோள ரீதியில் நடக்கும் பிரச்சனைகள், தலைவிரித்தாடும் பணவீக்கப் பிரச்சனை ஆகியவையால், அடுத்த சில காலத்துக்கு இந்தியச் சந்தை கடும் ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதோடு வெளிநாட்டு ஃபோர்ட்ஃபோலியோவிலிருந்து வரும் முதலீடுகள் குறையலாம். மேலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ விரைவில் தன் வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்பிஐ வட்டி விகிதம் தொடர்பான கூட்டத்தில், இந்திய மத்திய வங்கி, இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி கொள்கைகளை வகுப்பதை விட, பணவீக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளிக்க விரும்புவதை வெளிப்படுத்தியது. இப்போதைக்கு ஆர்பிஐ தன் வட்டி விகிதங்களை அதிகரிக்கவில்லை என்றாலும், காலப் போக்கில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதையே இது மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com