கூகுள் : 12,000 பேர் பணிநீக்கம் - வேலை இழந்தவர்களுக்கு என்ன கொடுக்கிறார் சுந்தர் பிச்சை?

இந்த மொத்த பணிநீக்கத்துக்கும் கூகுளின் CEO-ஆன சுந்தர் பிச்சை தானே பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். இப்போது அமெரிக்காவில் தொடங்கியிருக்கும் பணிநீக்கம் இந்தியா உள்பட பல நாடுகளிலும் நடத்தப்படும் எனவும் மின்னஞ்சலில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் : 12000 பேர் பணிநீக்கம் - வேலை இழந்தவர்களுக்கு என்ன கொடுக்கிறார் சுந்தர் பிச்சை?
கூகுள் : 12000 பேர் பணிநீக்கம் - வேலை இழந்தவர்களுக்கு என்ன கொடுக்கிறார் சுந்தர் பிச்சை?Twitter
Published on

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து கடந்த வெள்ளி அன்று பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது தொழில்நுட்ப உலகின் பெருநிறுவனமான கூகுள்.

உலகம் முழுவதிலும் இருந்து கூகுளின் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஊழியர்களுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் இ-மெயில் மூலமாக பணிநீக்க அறிவிப்பு அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த மொத்த பணிநீக்கத்துக்கும் கூகுளின் CEO-ஆன சுந்தர் பிச்சை தானே பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளிலேயே கூகுள் நிறுவனம் பலரை வேலைக்கு அமர்த்தியது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆட்களை வேலைக்கு எடுத்ததாகவும், இப்போது களநிலவரம் வேறுமாதிரியாக இருப்பதாகவும் பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>Google</p></div>

Google

Twitter

இப்போது அமெரிக்காவில் தொடங்கியிருக்கும் பணிநீக்கம் இந்தியா உள்பட பல நாடுகளிலும் நடத்தப்படும் எனவும் சட்டம் நடைமுறைகள் வேறுபடுபதாலேயே தாமதமாவதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அதற்கான தொகை மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும் என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

கூகுள் : 12000 பேர் பணிநீக்கம் - வேலை இழந்தவர்களுக்கு என்ன கொடுக்கிறார் சுந்தர் பிச்சை?
Bye Bye Sir : வைரலாகும் மூன்று வார்த்தை ராஜினாமா கடிதம் - என்ன, எங்கே, ஏன்?

அனைவருக்கும் உரிய நோட்டிஃபிகேஷன் பீரியட் 60 நாட்காள் வழங்கப்படும். குறைந்தபட்சம் 16 மாத சம்பளம் வழங்கப்படும். 16 வாரத்துக்கான கூகுள் பங்குகள் முடுக்கப்படும். 2022க்கான போனஸ், மீதமிருக்கும் விடுமுறைகள், 6 மாதத்துக்கான உடல்நல உதவிகள், வேலைத் தேடுவதற்கான உதவிகள், சொந்தநாட்டுக்கு திரும்பிச் செல்வதற்கான உதவிகள் ஆகியவை வழங்கப்படும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் : 12000 பேர் பணிநீக்கம் - வேலை இழந்தவர்களுக்கு என்ன கொடுக்கிறார் சுந்தர் பிச்சை?
பணிநீக்கம் செய்த மெட்டா: அமெரிக்க இந்தியர்களுக்கு உதவிய நல்லுள்ளங்கள்- ஓர் நெகிழ்ச்சி கதை!

சில நாட்களுக்கு முன்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. CEO சத்யா நாதெல்லா 10000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தார்.

மைக்ரோசாஃப்ட், கூகுள் மட்டுமின்றி ட்விட்டர், அமேசான், மெட்டா மற்றும் பல பெரிய நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கூகுள் : 12000 பேர் பணிநீக்கம் - வேலை இழந்தவர்களுக்கு என்ன கொடுக்கிறார் சுந்தர் பிச்சை?
மெட்டா முதல் ட்விட்டர் வரை: 2022ல் ஊழியர்களை லே ஆஃப் செய்த டாப் நிறுவனங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com