MS Oberoi: 25 ரூபாயில் தொடங்கிய பயணம் - உலகையே திரும்பி பார்க்க வைத்த பிசினஸ் கழுகின் கதை!

பாகிஸ்தானில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த இவர் சந்தித்த தோல்விகளை எண்ணிக்கையில் சொல்ல முடியாது. கடின உழைப்பும் காலமும் இவருக்கு சர்வதேச அங்கீராத்தை வழங்கின. பிரிட்டிஷ் அரசும் இந்திய அரசும் உயரிய விருதுகளை வழங்கி இவரை கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
MS Oberoi: 25 ரூபாயில் தொடங்கிய பயணம் - உலகையே திரும்பி பார்க்க வைத்த பிசினஸ் கழுகின் கதை!
MS Oberoi: 25 ரூபாயில் தொடங்கிய பயணம் - உலகையே திரும்பி பார்க்க வைத்த பிசினஸ் கழுகின் கதை!Twitter

நம் அனைவருக்குமே நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை இருக்கும். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு தோல்வியின் தாக்கத்தினால் நம் இலக்கைத் துரத்தாத சாதரண வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறோம். 

ஓபெராய் ஹோட்டல்ஸ் நிறுவனரான ராய் பகதூர் மோகன் சிங். ஓபராய் போல வலிமையான நெஞ்சமும் உறுதியான் நம்பிக்கையும் இருந்தால் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. 

இவர் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஹோட்டல் நிறுவனத்தை உருவாக்கினார். ஒரு சிறிய கிராமத்து இளைஞனாக இருந்து இந்த இடத்தை வந்தடைவதற்குள் அவர் பல தோல்விகளையும் சறுக்கல்களையும் சந்தித்துள்ளார். 

ஓபெராய் குழுமம் பற்றியும் அதனை நிறுவிய மோகன் சிங் ஓபராய் பற்றியும் நாம் முன்னதாக கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அவரது அம்மா கொடுத்த 25 ரூபாயில் மாறிய அவரது வாழ்க்கை பற்றி அறிந்தவர்கள் குறைவே.

பாகிஸ்தானின் ஜீலம் மாவட்டத்தில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 1998ம் ஆண்டு பிறந்தவர் ஓபெராய். பிறந்த 6 மாதத்திலேயே தந்தையை இழந்தார். இதனால் மொத்த குடும்ப பாரமும் அவரது தாயின் மீது விழுந்தது. 

தனி பெண்ணாக இருந்து குடும்பத்தை வளர்ப்பதென்பது இப்போதிருப்பதைப் போல அந்த காலத்தில் எளிதானதாக இல்லை. இதனால் குறிப்பிட்ட வயது வந்ததும் (1918) தனது படிப்பை விட்டுவிட்டு லாகூரில் உள்ள உறவினரின் தொழிற்சாலையில் மேனேஜராக பணியாற்றத் தொடங்கினார் ஓபெராய்.

ஆனால் அமிர்தசரஸ் முழுவதும் பரவிய கலவரங்களால் தொழிற்சாலை  ஒரு வருடத்திற்குள் மூடப்பட்டது. மறுபக்கம் ஓபெராய் வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்பட்டு அவருக்கு இஷ்ரான் தேவி என்பவருடன் திருமணம் முடிந்தது.

திருமணத்துக்கு பிறகு தனது மனைவியின் சகோதரர்களுடன் சர்கோந்தா என்ற நகரத்தில் வாழத் தொடங்கினார் ஓபெராய். ஆனால் அங்கு அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல அவரது நம்பிக்கை மங்கிக்கொண்டே வந்தது.

வேலை தேடி நேரமும் பணமும் தீர்ந்தது தான் மிச்சம் என்ற நிலையில் ஓபெராய் தனது சொந்த கிராமத்துக்கு திரும்பினார். அம்மா உடன் இருந்து அவரைப்பார்த்துக்கொள்ள ஓபெராய் விரும்பினார். 

ஆனால் அவரது அம்மாவுக்கு அந்த எண்ணம் இல்லை. அவரது மனைவியின் சகோதரர்களுடனே இருக்குமாறு அவரிடம் தெரிவித்து 25 ரூபாயும் கொடுத்து அனுப்பினார். 

MS Oberoi: 25 ரூபாயில் தொடங்கிய பயணம் - உலகையே திரும்பி பார்க்க வைத்த பிசினஸ் கழுகின் கதை!
RG சந்திர மோகன்: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர், 18000 கோடிக்கு அதிபதியானது எப்படி?

வாழ்க்கை தோல்விகளும் துன்பங்களுமாக நகர 1922ம் ஆண்டு பிளேக் நேய் தொற்றுக் காரணமாக சிம்லாவுக்கு இடம் பெயர்ந்தார் ஓபெராய். அங்கு ஒரு ஹோட்டலில் மாதம் 50 ரூபாய் சம்பளத்துக்கு கிளர்க் வேலை கிடைத்தது அவருக்கு. 

அப்போது தான் முதன்முதலாக ஹோட்டல் இன்டஸ்டரிக்குள் நுழைகிறார். நீண்ட காலமாக பல கஷ்டங்களுக்கு பிறகு இந்த வேலை கிடைத்ததால் தன்னால் முடிந்தவரை கடின உழைப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார் மோகன் சிங் ஓபெராய்.

1934ம் ஆண்டு தன்னிடம் இருந்த அனைத்து சொத்துகளையும் விற்று மனைவியின் நகைகளை அடமானம் வைத்து தி கிளார்க்ஸ் ஹோட்டல் என்ற முதல் சொத்தை வாங்கினார் ஓபெராய். 

அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கடன்களையும் அடைத்து முடித்தார். காலரா தொற்று பரவிய போது கல்கத்தாவில் இருந்த 500 அறைகளைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான ஹோட்டல் லீஸுக்கு வந்தது. அதனை எடுத்து நல்ல லாபம் தரக் கூடிய தங்குமிடமாக மாற்றினார்.

வெற்றிகள் அவரை எந்த இடத்துக்கு கொண்டு சென்ற போதும் கடினமாக உழைப்பதை ஓபெராய் நிறுத்தவில்லை. விளைவாக இந்தியாவின் இரண்டாவது பெரிய ஹோட்டல் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார். 

உலக அவளவில் அந்த நிறுவனத்தில் 12,000க்கும் மேலான மக்கள் பணியாற்றுகின்றனர். 5 நாடுகள் 31 சொகுசு ஹோட்டல்கள் மற்றும் சில சொகுசு கப்பல்களை ஓபெராய் நிறுவனம் சொந்தமாக்கியிருக்கிறது. 

MS Oberoi: 25 ரூபாயில் தொடங்கிய பயணம் - உலகையே திரும்பி பார்க்க வைத்த பிசினஸ் கழுகின் கதை!
Priyank Sukhija: B.Com டிகிரியை பாதியில் நிறுத்தியவர் 100 கோடி சம்பாதித்தது எப்படி?

ஓபெராய் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் நிறுவனத்தை உருவாக்கியதன் விளைவாக ஹோட்டல் இண்டஸ்ட்ரியின் தந்தை என அழைக்கப்படுகிறார். 

மேலும், 1943ம் ஆண்டு அவருக்கு பிரிட்டிஷ் அரசு ராய் பகதூர் என்ற பட்டத்தை வழங்கியது. 

2001ம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியது. 

MS Oberoi: 25 ரூபாயில் தொடங்கிய பயணம் - உலகையே திரும்பி பார்க்க வைத்த பிசினஸ் கழுகின் கதை!
How To Become Rich? இந்த 7 விஷயங்களை செய்தால் நீங்களும் மில்லியனர் ஆகலாம்!

ஹால் ஆஃப் ஃபேம் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் டிராவல் ஏஜெண்ட்ஸ் (ASTA) மற்றும் சர்வதேச ஹோட்டல் அசோசியேஷன் (IHA), நியூயார்க்கில் மேன் ஆஃப் தி வேர்ல்ட் விருதுகளையும் பெற்றுள்ளார்.

சிறிய கிராமத்தில் பிறந்த அவருக்கு கடின உழைப்பு அதிக செல்வத்தையும் உலகளாவிய அங்கீகாரத்தையும் வழங்கியது. நம் ஒவ்வொருவரையும் வெற்றியைத் துரத்த ஊக்கப்படுத்து கதையை விட்டுவிட்டு மார்ச் 3, 2002ல் அவரது உயிர் பிரிந்தது.

MS Oberoi: 25 ரூபாயில் தொடங்கிய பயணம் - உலகையே திரும்பி பார்க்க வைத்த பிசினஸ் கழுகின் கதை!
Ramya Ravi: பிரியாணி பிசினஸில் 10 கோடி சம்பாதிக்கும் பெண் - ஊர் குருவி பருந்தான கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com