"எலான் மஸ்காக இருப்பதன் கஷ்டம் எலான் மஸ்குக்கு தான் தெரியும்"- G20 மாநாட்டில் Chief Twit!
"எலான் மஸ்காக இருப்பதன் கஷ்டம் எலான் மஸ்குக்கு தான் தெரியும்"- G20 மாநாட்டில் Chief Twit!Twitter

"எலான் மஸ்க்காக இருப்பதன் கஷ்டம் எலான் மஸ்குக்கு தான் தெரியும்"- G20 மாநாட்டில் Chief Twit

"என்னுடைய தட்டில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் என்னால் முடிந்த வரை முழுவதுமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்... காலை தொடங்கி இரவு வரை வாரத்தின் 7 நாட்களும் உழைத்துக்கொண்டிருகிறேன்"
Published on

உலக நாடுகள் இணைந்து நடத்தும் ஜி20 மாநாட்டுக்கு முன்னதாக ஜி20 அமைப்புக்கு கொள்கைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க வர்த்தக உச்சி மாநாடு நடைபெறும். இதற்கு பி20 என்று பெயர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் பேசிய விஷயங்களை அவரை பின்பற்றுபவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பி20 அரங்கத்தில் எலான் மஸ்க் போல உருவாக நினைப்பவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர், "நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். எத்தனை பேர் உண்மையாகவே என்னைப் போல இருக்க விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதாவது நீங்கள் என்னைப் போல இருப்பதாக கற்பனை செய்வது முற்றிலும் வேறு" என்று அவர் கூறினார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்News Sense

மேலும் அவர், "வெளிப்படையாக கூறவேண்டுமென்றால் என்னை நானே சித்ரவதை செய்துகொள்ளும் அளவு அடுத்த கட்டத்தை எட்டி விட்டது" என்றுக் கூறினார்.

"என்னுடைய தட்டில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் என்னால் முடிந்த வரை முழுவதுமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்... காலை தொடங்கி இரவு வரை வாரத்தின் 7 நாட்களும் உழைத்துக்கொண்டிருகிறேன்"

51 வயது கோடீஸ்வரரான எலான் மஸ்க், உச்சி மாநாட்டில் வீடியோ கால் மூலம் கலந்துகொண்டார். அவர் இந்த வார இறுதியில் நீதிமன்ற வழக்கு ஒன்றை சந்திக்க வேண்டியதால் அவரால் நேரில் வர இயலவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

"எலான் மஸ்காக இருப்பதன் கஷ்டம் எலான் மஸ்குக்கு தான் தெரியும்"- G20 மாநாட்டில் Chief Twit!
எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

டெஸ்லா - எலக்ட்ரிக் கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் - விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டார் லின்க் - செயற்கைகோள் இணையவசதி (ஸ்பேஸ் எக்ஸின் துணை நிறுவனம்), போரிங் கம்பனி - சுரங்க நிறுவனம், நியூரா லின்க் - மனிதனையும் கணினியையும் இணைக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் நிறுவனம் ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரையும் வாங்கியிருக்கிறார்.

"எலான் மஸ்காக இருப்பதன் கஷ்டம் எலான் மஸ்குக்கு தான் தெரியும்"- G20 மாநாட்டில் Chief Twit!
Twitter: இயேசு, சாத்தானுக்கு 'Verified' கணக்குகள் - என்ன செய்யப்போகிறார் எலான் மஸ்க்?

இதனால் அவரது பணிச்சுமை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. தவிர, ட்விட்டரில் ஏற்படும் சர்ச்சைகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் வேறு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

இந்த பேச்சின் போது ட்விட்டரில் ஷார்ட் மற்றும் லாங் வீடியோக்களை அதிகரிக்கப்போவதாகவும் அதனை டிக் டாக், வீசேட் போன்ற சமூக வலைத்தளமாக மாற்றப் போவதாகவும் கூறியிருந்தார்.

"எலான் மஸ்காக இருப்பதன் கஷ்டம் எலான் மஸ்குக்கு தான் தெரியும்"- G20 மாநாட்டில் Chief Twit!
ட்விட்டர் : அதிகளவில் வேலையைவிட்டு நீக்கப்பட்ட ஊழியர்கள் - என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com