என்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் பணம் இருக்காதா? - நிதின் காமத் சொன்னது என்ன?

முதலீடுகளைப் பெறுவது கடினமாகி வரும் காலகட்டத்தில், எப்படியாவது வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு போய், மிகக் குறுகிய காலத்தில், அடுத்த 2 - 3 ஆண்டுகளுக்கு நிறுவனத்தை நிதி நெருக்கடியின்றி நடத்துவது நோக்கமாக மாறிவிட்டது அவலத்துக்குரியது.
நிதின் காமத்
நிதின் காமத் Twitter

உலகம் முழுக்க அதிக வளர்ச்சி காட்டும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனப் பங்குகளின் கணிசமான விலை சரிவு அதிகரிப்பது தினம் தினம் புதிய நீச்சங்களைத் தொட்டு வருகிறது.

இது டாட் காம் பூமை நினைவுபடுத்துகிறது. இந்தியா இந்த பிரச்சனையை எதிர்கொண்டதற்கு, பல நிறுவனங்கள் பட்டியலிடப்படாதது ஒரு முக்கிய காரணம். அதோடு கடந்த ஆண்டு பல நிறுவனங்கள் கணிசமாகப் பணத்தை முதலீடுகளாகப் பெற்றுள்ளன.

முதலீடுகளைப் பெறுவது கடினமாகி வரும் காலகட்டத்தில், எப்படியாவது வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு போய், மிகக் குறுகிய காலத்தில், அடுத்த 2 - 3 ஆண்டுகளுக்கு நிறுவனத்தை நிதி நெருக்கடியின்றி நடத்துவது நோக்கமாக மாறிவிட்டது அவலத்துக்குரியது. வியாபாரங்கள் சட்டென தங்கள் போக்கிலிருந்து மாறி புதிய விஷயங்களைக் கடைப்பிடிப்பது கிட்டத்தட்டச் சாத்தியமற்றது, குறிப்பாகப் பெரிய நிறுவனங்கள் இந்த மாற்றங்களை எதிர்கொள்வது சிரமமானது.

Paytm
PaytmTwitter

கடந்த 3 ஆண்டுகளில் இ எஸ் ஓ பி (Employee Stock Ownership Plan) கொடுத்த நிறுவனங்களில் பெரும்பாலானவை பணமின்றி சிரமப்படலாம், ஊழியர்களின் நிகர சொத்து மதிப்பு கணிசமாகக் குறையலாம். அது அவர்களின் மனநிலையைப் பாதிக்கும். வியாபாரம் நடத்துபவர்களுக்கு அது மேலும் கடினமான சூழலை ஏற்படுத்தும் என சிரோதா தரகு நிறுவனத்தின் தலைவர் நிதின் காமத் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிதின் காமத்
ஆனந்த சுப்ரமணியன் : கோடிகளில் பங்கு சந்தை மோசடி, இமாலய குருவின் செல்லப்பிள்ளை- யார் இவர்?

மேலும், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்து நிறுவனத்தை நடத்தி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒரு நல்ல பொருள் அல்லது சேவையை தயார் செய்து களமிறக்குவதற்கு கூட, மில்லியன் கணக்கிலான டாலர் முதலீடுகளைப் பெற வேண்டிய சூழல் நிலவுவது வேடிக்கைக்குரியது என்றும் தன் கருத்தைக் கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் ஐ பி ஓ முறையில் தன் நிறுவனப் பங்குகளை வெளியிட்ட பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலை 1,955 ரூபாயைத் தொட்டது. அதன் பின் கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது சுமாராக 515 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

நிதின் காமத்
டாடா குழுமம் : போரினால் லாபம் அடைந்த Tata நிறுவனம் | பகுதி 1

அதே போல சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, அதிகபட்சமாக 169 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து விலை சரிந்து தற்போது சுமார் 52 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்களின் நிதி நிர்வாகத்தையும், சிந்தனையையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே பல தரப்பட்ட நிபுணர்களும் கூறுகின்றனர்.

நிதின் காமத்
ஓவர்நைட்டில் 14,400% வளர்ச்சி கண்ட கிரிப்டோ: எதனால் தெரியுமா? - அதிர்ச்சி தகவல்

இந்த 2022ஆம் ஆண்டு இன்னும் பல இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் பங்குகளைச் சந்தையில் பட்டியலிடப் போவதாகவும் பல செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பெரும்பாலானவை, ஒரு மளிகைக் கடையில் ஈட்டப்படும் சொற்ப லாபம் கூட ஈட்ட முடியாமல் திணறுவதால் தான் மிகப் பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஸ்டார்ட் அப் பக்கம் செல்லவே பயப்படுகிறார்கள். இனியாவது இந்திய ஸ்டார்ட் அப்கள் சுதாரித்துக் கொண்டு தங்கள் பிரச்சனைகளைச் சரி செய்வார்கள் என்று நம்புவோம்.

நிதின் காமத்
Jio அம்பானி கதை : திருபாய் நவீன இந்திய பொருளாதாரத்தின் குருபாய் | பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com