வைரத்துக்குள் வைரம் : அதிசய கல்லை கண்டுபிடித்த சூரத் நிறுவனம் - மதிப்பு என்ன?

"இதற்கு முன்னர் இப்படி ஒன்றை நாங்கள் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதுமில்லை" என்கிறார் அந்த நிறுவனத்தின் சேர்மன். 'துடிக்கும் இதயம்' அதாவது Beating Heart எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரம் குறித்துப் பார்க்கலாம்...
வைரத்துக்குள் வைரம் : அதிசய கல்லை கண்டுபிடித்த சூரத் நிறுவனம் - மதிப்பு என்ன?
வைரத்துக்குள் வைரம் : அதிசய கல்லை கண்டுபிடித்த சூரத் நிறுவனம் - மதிப்பு என்ன?Twitter
Published on

சூரத்தில் உள்ள ஒரு நிறுவனம் முதன்முதலாக வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு வைரத்துக்குள் வைரம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.

வி டி குளோபல் என்ற நிறுவனம் இந்த வைரத்தைக் கண்டுபிடித்தது. இது 0.329 காரட் டி-நிற வைரக் கல்லாகும்.

இந்த வைரத்துக்கு நிறுவனத்தினர் 'துடிக்கும் இதயம்' அதாவது Beating Heart எனப் பெயர் வைத்துள்ளனர்.

இந்த வைரம் கடந்த அக்டோபர் மாதமே கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வைரம் நிச்சயமாக அனைவருக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும். இதில் ஒரு வைரத்துக்குள் இன்னொரு வைரம் இருக்கிறது.

இது போன்ற ஒன்றை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் இப்படிப்பட்ட ஒரு வைரம் கிடைப்பதென்பது அரிதிலும் அரிதான நிகழ்வு.

இந்த வைரத்தை முதன்முதலாகப் பார்த்தவர் இதற்கு துடிக்கும் இதயம் என்ற பெயரை பரிந்துரைத்துள்ளார்.

வைரத்துக்குள் வைரம் : அதிசய கல்லை கண்டுபிடித்த சூரத் நிறுவனம் - மதிப்பு என்ன?
உலகின் மிக பெரிய வைரம் - அரியவகை Pink நிற வைரத்தின் மதிப்பு என்ன?

"சூரத்தில் இருக்கும் வைரங்களை சோதித்தபோது நாங்கள் இந்த வைரத்தைக் கண்டுபிடித்தோம். இதற்குள் ஒரு சிறிய வைரம் சிக்கிக்கிடந்தது. உள்ளே இருந்த வைரம் அங்கும் இங்குமாக ஆடிக்கொண்டிருந்தது. இதற்கு முன்னர் இப்படி ஒன்றை நாங்கள் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதுமில்லை" என வி டி குளோபல் நிறுவனத்தின் சேர்மன் வல்லப் வாகசியா கூறியுள்ளார்.

வைரத்துக்குள் வைரம் : அதிசய கல்லை கண்டுபிடித்த சூரத் நிறுவனம் - மதிப்பு என்ன?
கோகினூர் முதல் நம்பிக்கை வைரம் வரை: உலகின் விலையுயர்ந்த வைரங்கள் - என்னென்ன சிறப்பு?

விடிஜி நிறுவனம் உலகம் முழுவதும் வைரம் வியாபாரம் செய்கிறது. சூரத் மற்றும் மும்பையில் தலைமையகங்களைக் கொண்டுள்ளது.

இப்போது அந்த அதிசய வைரத்தை இங்கிலாந்தில் உள்ள டி பீர்ஸ் என்ற நிறுவனத்துக்கு ஆராய்ச்சிகளுக்காக அனுப்பியுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் பல சோதனைகள் நடக்கும். அதன் பிறகு இந்த வைரம் உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெறும். அதன் பின்னரே இந்த விலைமதிப்பற்ற பொக்கிஷத்தின் மதிப்பு தெரியவரும்.

வைரத்துக்குள் வைரம் : அதிசய கல்லை கண்டுபிடித்த சூரத் நிறுவனம் - மதிப்பு என்ன?
Queen Elizabeth II: கோஹினூர் வைரம் திரும்ப கிடைக்குமா? - டிவிட்டரில் டிரெண்டாகும் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com