நம் மொத்த வாழ்வும் வேலையைச் சுற்றி தான் நகர்கிறது. நமது வேலைக்காக பல விஷயங்களை இழக்கிறோம். சில அழுத்தங்களையும் சிக்கல்களையும் பிரச்னைகளையும் கடந்து நமது வேலையை சிறப்பாக முடித்துவிட நினைக்கிறோம். நமது விருப்பம், கனவு, திறமை எல்லாவற்றையும் கடந்து வேலையிலிருந்து நம்மை நீக்கிவிடக் கூடாது என்ற பயம் தான் அதிகமாக இருக்கும்.
ஒரு நாள் வேலை பறிபோகும் போது பொருளாதார ரீதியில் பின்னடைவோம், வசதிகளை இழப்போம், அந்தஸ்து, மரியாதை என வாழ்வில் எல்லாமும் சென்றுவிடும்.
நமது வேலை நம் நம்பிக்கை தொடர்பான காரணங்களுக்குக்காக பறிக்கப்பட்டால் எப்படியிருக்கும்.?அப்படித்தான் நடந்து இருக்கிறது இந்த நாத்திகர்களுக்கு.
அதன்பின் அவர்கள் என்ன செய்தனர் தெரியுமா?
அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு நபர்களும் வேலை செய்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். அவர்கள் நிறுவனத்தின் கிறிஸ்தவ ஜெபத்தில் பங்கேற்காததால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி (customer service representative) மெக்கென்சி சாண்டர்ஸ் மற்றும் கட்டுமான மேலாளர் ஜான் மெக்ஹா சார்பில் வேலை வாய்ப்பு ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த புகாரில் அரோரா ப்ரோ சர்வீசஸ் என்ற நிறுவனம் சட்டத்துக்கு புறம்பாக ஊழியர்களை தேவையற்ற மத செயல்பாடுகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான ஜான், "இங்கு வேலை செய்ய நீங்கள் பணம் பெற்றுக்கொள்கிறீர்கள். மத செயல்பாடுகளில் பங்கேற்றால் மட்டும் நீங்கள் இங்கு வேலை செய்யலாம். இல்லாவிட்டால் உங்களுக்கு இங்கு வேலை இல்லை" என்று நிறுவன உரிமையாளர் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.
கத்தோலிக்க பிரார்த்தனையை அனைவரும் ஒன்றாக படிக்க வேண்டும் என உரிமையாளர் கூறியது முதல், காலை ஜெப கூட்டங்கள் Cult முறை போல மாறியதாக மெக்கென்சி புகாரில் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த நிறுவனத்தில் கடந்த ஜூன் 2020 முதல் பிராத்தனை கூட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன.
பைபிள் வாசனங்களை வாசிப்பது தொடங்கி ஊழியர்கள் தங்களது சொந்த ஜெபங்களைக் கூறுவது வரை கூட்டங்கள் நீண்டிருக்கிறது.
இன்னும் சில நாட்களில் கூட்டத்தில் கலந்துக் கொள்ளாதவர்களை உரிமையாளர் கண்டிக்கத் தொடங்கியுள்ளார்.
ஜான் மெக்ஹா இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க அனுமதி கேட்டபோது அவரது சம்பளத்தை பிடித்துள்ளனர். பின்னர் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த கூட்டங்களை மெக்கென்சி சாண்டர்ஸ் புறக்கணித்ததால் அவரும் ஜனவரி 2021ல் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
வேலை வாய்ப்பு ஆணையத்தின் வழக்கறிஞர் மெலிண்டா சி டுகாஸ், "சட்டம் ஊழியர்கள் மதத்தை நம்பிக்கையானது வேலையினால் பாதிக்காமல் இருக்கும் பாதுகாப்பை வழங்குகிறது"
மேலும் அவர், "நிறுவனத்தில் ஜெபக் கூட்டங்களை நடத்த செலவு செய்யும் முதலாளிகள், நிறுவனத்தின் நம்பிக்கைக்கு மாறான நம்பிக்கைகளை பின்பற்றவும் ஊழியர்களுக்கு இடமளிக்க வேண்டும். இது அவர்களின் கடமை எனக் கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust