அதானிக்கு இருக்கும் சீன தொடர்பு: யார் இந்த சாங் சுங்-லிங்? - கேள்வி எழுப்பிய ஹிண்டன்பெர்க்

குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த அதானி குழுமத்தின் அறிக்கையின் மீதே பல கேள்விகளை எழுப்பியது ஹிண்டன்பெர்க். அதில் முக்கியமான கேள்வி "சீனரான சாங் சுங்-லிங் உடனான தொடர்பு பற்றி ஏன் விளக்கவில்லை?" என்பது தான்.
அதானிக்கு இருக்கும் சீன தொடர்பு: யார் இந்த சாங் சுங்-லிங்? - கேள்வி எழுப்பிய ஹிண்டன்பெர்க்
அதானிக்கு இருக்கும் சீன தொடர்பு: யார் இந்த சாங் சுங்-லிங்? - கேள்வி எழுப்பிய ஹிண்டன்பெர்க்Twitter
Published on

அதானி மீதான ஹிண்டென்பெர்கின் அறிக்கைப் பற்ற வைத்த நெருப்பு இன்னும் புகைந்துகொண்டு தான் இருக்கிறது.

அதானியின் 20,000 கோடி ரூபாய் எஃப்.பி.ஓக்கள் விற்கப்பட்டாலும் அவரது பங்குகளின் விலை தொடர்ந்து சரிவையே கண்டு வருகிறது.

இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த அதானி, முதல் 10 இடங்களை விட்டு தூக்கி எரியப்பட்டார்.

இப்போது 16வது இடத்துக்கு வந்திருக்கும் அவர், தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறார்.

அதானி மீது வைக்கப்பட்ட அடுக்கடுக்கான புகார்களுக்கு விளக்கமளிப்பதாக 400க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை அதானி நிறுவனம் வெளியிட்டது.

ஆனால் அந்த விளக்கம் ஹிண்டன்பெர்க் நிறுவனத்தையும் பொருளாதார அறிஞர்களையும் துளியும் திருப்திப்படுத்தவில்லை.

அந்த அறிக்கையின் மீதே பல கேள்விகளை எழுப்பியது ஹிண்டன்பெர்க். அதில் முக்கியமான கேள்வி "சீனரான சாங் சுங்-லிங் உடனான தொடர்பு பற்றி ஏன் விளக்கவில்லை?" என்பது தான்.

அதானிக்கு இருக்கும் சீன தொடர்பு: யார் இந்த சாங் சுங்-லிங்? - கேள்வி எழுப்பிய ஹிண்டன்பெர்க்
அதானி vs ஹிண்டன்பெர்க் : அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி பதில் என்ன?

யார் இந்த சாங் சங்-லிங்க்?

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் குறித்து உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? 2013ம் ஆண்டு வெளிவந்த அந்த ஊழல் காங்கிரஸ் அரசையே அசைத்துப் பார்த்தது.

விவிஜபிகளுக்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை பெற இந்தியாவை சேர்ந்த சிலருக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ரூ.400 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.

அதானிக்கு இருக்கும் சீன தொடர்பு: யார் இந்த சாங் சுங்-லிங்? - கேள்வி எழுப்பிய ஹிண்டன்பெர்க்
அதானி குழுமம் மோசடி செய்கிறதா? : ஹிண்டன்பெர்க் வைக்கும் குற்றச்சாட்டுகள் இவைதான் Explained

அந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் தொடர்புடைய சிங்கப்பூரைச் சேர்ந்த குடமி இன்டர்நேஷனல் நிறுவனத்தை நடத்துபவர் தான் புகைப்படத்தில் அதானியுடன் இருக்கும் சாங் சுங்-லிங். இவர் ஒரு சீனர்.

சுங்-லிங் பற்றி ஹிண்டன்பெர்க் நிறுவனம், "இது அதானியின் பங்குதாரர்கள் மட்டுமல்ல இந்தியாவின் நலனில் அக்கறைகொண்டுள்ள அனைவருக்கும் முக்கியமான விஷயம்" எனக் குறிப்பிடுகிறது.

அதானி நிறுவனத்தின் மீதான வைர வணிகம் தொடர்பான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளில் சுங்-லிங்க்கு தொடர்பு இருப்பதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் கூறுகிறது.

சாங் சீன்-டிங் அதானியின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அரசு விழா
சாங் சீன்-டிங் அதானியின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அரசு விழா
அதானிக்கு இருக்கும் சீன தொடர்பு: யார் இந்த சாங் சுங்-லிங்? - கேள்வி எழுப்பிய ஹிண்டன்பெர்க்
ஹிண்டன்பெர்க்: அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டிய நேதன் ஆண்டர்சன் யார்?

அத்துடன் சுங் சாங்-லிங் சிங்கப்பூரில் உள்ள கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் முகவரியை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களையும் ஹிண்டன்பெர்க் எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும் சுங் சாங்-லிங்கின் மகன் சாங் சீன்-டிங் பிஎம்சி புராஜக்ட்ஸ் என்ற நிறுவனத்தை தைவானில் நடத்தி வருகிறார். ஒரு அரசு விழாவில் தன்னை அதானி குழுமத்தின் தைவான் பிரதிநிதியாக அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்த பிஎம்சி நிறுவனத்துடன் இணைந்து அதானி நிறுவனம் பல முறைகேடுகளை செய்துள்ளதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதானிக்கு இருக்கும் சீன தொடர்பு: யார் இந்த சாங் சுங்-லிங்? - கேள்வி எழுப்பிய ஹிண்டன்பெர்க்
அதானி மீது அடுத்த பகீர் குற்றச்சாட்டு: அதிர வைக்கும் தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com