நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் சென்றால்தான் வாழ்கையில் பெரிய ஆளாக வர முடியும் எனப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். நம் பெரும்பாலான பெற்றோர் கூட இதே விஷயத்தை நம்பி நம்மை ஊக்கப்படுத்தி இருப்பார்கள்.
ஆனால் இங்கு ஒரு பெண்மணி, கல்லூரிக்குக் கூட செல்லாமல், இந்தியாவின் நம்பர் 1 பெண் பணக்காரராக வலம் வருகிறார். அவர் பெயர் சாவித்ரி ஜிண்டால்.
தொழில்நுட்பக் கல்வி வரை மட்டுமே படித்த சாவித்ரி, 1970களில் ஓம்பிரகாஷ் ஜிண்டாலை திருமணம் செய்து கொண்டார். அப்போது தான் ஜிண்டால் குழுமம் மெல்லத் தொழில் துறையில் வளரத் தொடங்கி இருந்தது. கணவர் ஓம்பிரகாஷ் தொழிலைக் கவனித்துக் கொள்ள மனைவி அரசியலில் பிசியாக இருந்தார்.
இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியில் இப்போதுவரை உறுப்பினராக இருக்கிறார். ஒருகாலத்தில் (புபேந்தர் சிங் முதல்வராக இருக்கும் போது) ஹரியானா மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், ஹரியானா மாநில அரசின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார்.
2005ஆம் ஆண்டு அவரது கணவர் ஓம்பிரகாஷ் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் காலமான பிறகு, சாவித்ரி, ஜிண்டால் குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ஸ்டீல், மின்சாரம், சிமென்ட், அடிப்படை கட்டுமானங்கள்... எனப் பல தொழில்களைச் செய்து வரும் ஜிண்டால் குழுமத்தைத் தனியே நிர்வகிப்பது அத்தனை எளிதான காரியமல்ல.
எனவே இவரது மகன்களும் ஜிண்டால் குழும வியாபாரங்களையும் நிறுவனங்களையும் நிர்வகித்து வருகிறார்கள். மூத்த மகன் சஜ்ஜன் ஜிண்டால் ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இளைய மகன் நவீன் ஜிண்டால், ஜிண்டால் ஸ்டீல் & பவர் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் 4.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு, 2021ஆம் ஆண்டில் 9.7 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2022ஆம் ஆண்டில் 17.7 பில்லியன் அமெரிக்க டாலராகவும் அதிகரித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பல நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே தடுமாறிக் கொண்டிருந்த போது சாவித்ரி ஜிண்டால், முகேஷ் அம்பானி, கெளதம் அதானி... போன்ற ஒரு சில பில்லியனர்களின் சொத்துபத்துக்களின் மதிப்பு அதிகரித்தது கொஞ்சம் விந்தையான விஷயம் தான்.
உலக டாப் பெண் பில்லியனர்கள் பட்டியலில் லாரல் நிறுவனத்தின் தலைவர் ஃப்ரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் (Francoise Bettencourt Meyers & family) 74.8 பில்லியன் அமெரிக்க டாலரோடு முதலிடத்தில் இருக்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் இப்பட்டியலில் 13ஆம் இடத்தில் இருக்கிறார்.
இந்தியப் பெண் பில்லியனர்கள் பட்டியலில் சாவித்ரி ஜிண்டாலைத் தொடர்ந்து இந்தியாவில் நைகா நிறுவனத்தின் நிறுவனர் ஃபல்குனி நய்யார், யூ எஸ் வி பார்மா நிறுவனத்தின் தலைவர் லீனா திவாரி, பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜிம்தார் ஷா அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust