Resume : "13 வருடம் இல்லத்தரசி அனுபவம்" பெண்ணின் வித்தியாசமான ரெசியூம்!

தொழில்வாழ்க்கைக் குறித்த மொத்த குறிப்புகளும் சாதனைகளும் அந்த ரெசியூமில் இடம் பெற்றிருக்கும். உலகிலேயே முதன் முறையாக தான் இல்லத்தரசியாக இருந்த நாட்களையும் ரெசியூமில் சேர்த்துள்ளார் பெண் ஒருவர்.
Resume : "13 வருடம் இல்லத்தரசி அனுபவம்" பெண்ணின் வித்தியாசமான ரெசியூம்!
Resume : "13 வருடம் இல்லத்தரசி அனுபவம்" பெண்ணின் வித்தியாசமான ரெசியூம்!Resume (representative)
Published on

வேலைக்கு சேர கொடுக்கும் ரெசியூம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது வேலை தேடி அழைந்த ஒவ்வொருவருக்கும் தெரியும்.

ஒவ்வொரு முறையும் நேர்காணல் செய்பவரை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் புதுமையான ரெசியூமை உருவாக்க நினைப்போம்.

தொழில்வாழ்க்கைக் குறித்த மொத்த குறிப்புகளும் சாதனைகளும் அந்த ரெசியூமில் இடம் பெற்றிருக்கும். உலகிலேயே முதன் முறையாக தான் இல்லத்தரசியாக இருந்த நாட்களையும் ரெசியூமில் சேர்த்துள்ளார் பெண் ஒருவர்.

இல்லத்தரசியாக இருந்து அவர் பெற்ற திறன்களையும் செய்த பணிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். க்ரோவ்திக் என்ற நிறுவனத்துக்கு வந்த அந்த ரெசியூமை நிறுவனரான யுகன்ஷ் சோக்ரா தனது லின்க்ட் இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"நாங்கள் இந்த ரெசியூமைப் பார்த்தோம் அவருக்கு 13 வருடம் இல்லத்தரசியாக அனுபவம் இருக்கிறது. இது அவரை தனித்துவமாக காட்டுகிறது" என அவர் எழுதியுள்ளார்.

இல்லத்தரசி
இல்லத்தரசிRepresentative (Canva)



மேலும் அவர், " எனக்கு இந்த ரெசியூமை பிடித்திருக்க சில காரணங்கள் இருக்கின்றன. குடும்பத்தை நிர்வகிப்பது சாதாரண விஷயமல்ல, அதனை குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தியாவில் 20% பெண்கள் மட்டுமே தொழில்முறை பணிகளை செய்கின்றனர். வீட்டுவேலைகளை செய்வதில் தம்பதிகளிடமும் ஏன், குழந்தைகளிடம் கூட பாலின பாகுபாடு பார்க்கப்படுகிறது. " எனவும் சேர்த்திருந்தார்.

Resume : "13 வருடம் இல்லத்தரசி அனுபவம்" பெண்ணின் வித்தியாசமான ரெசியூம்!
Bye Bye Sir : வைரலாகும் மூன்று வார்த்தை ராஜினாமா கடிதம் - என்ன, எங்கே, ஏன்?

இந்த பதிவுக்கும் அந்த பெண்ணுக்கும் பல தரப்பில் இருந்து ஆதரவு சேர்ந்திருக்கிறது. அந்த பெண்ணின் உழைப்பை பலரும் பாராட்டியிருக்கின்றனர்.

இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள் தங்களது உழைப்பை தாங்களே கண்டுகொள்வதில்லை. ஆனால் இந்த பெண்ணோ தனது 13 வருட அனுபவத்துக்கு மதிப்பளித்திருக்கிறார் என்பதே இந்த ரெசியூமை அனைவரும் பாராட்ட காரணம். அந்த பெண்ணுக்கு வேலை கிடைக்கும் என நம்புவோம்!

Resume : "13 வருடம் இல்லத்தரசி அனுபவம்" பெண்ணின் வித்தியாசமான ரெசியூம்!
Youtube ஷேர் செய்த நல்ல ராஜினாமா கடிதம் - இணையத்தில் வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com