விஜய் குறித்த இந்த 25 விஷயங்கள் தெரியுமா?

Flex வைப்பது, திரையரங்குகளில் ஆட்டம் போடுவது, சிலை வைப்பது மட்டுமல்லாமல் இரத்த தானம் செய்வது, இல்லாதவர்களுக்கு உதவுவது, அரசியலில் ஈடுபடுவது என அவரது ரசிகர்கள் பல வழிகளில் அன்பை வெளிப்படுத்த முயல்வதைக் காணமுடியும். இவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் விஜய்க்கு கிடைத்தற்கு பின்னிருக்கும் பயணம் என்ன?
vijay
vijayVarisu
Published on

தளபதி விஜயின் பிறந்தநாளையொட்டி நேற்று வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்தின் டைட்டில் மற்றும் புகைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் அதனை விட்டுக்கொடுக்கவில்லை. விமர்சனங்கள் எவ்வளவு இருந்தாலும் தங்கள் தளபதியை கொண்டாடித்தீர்த்தனர்.

"எல்லாமே கொடுத்துட்டீங்க நண்பா ஹிட்டு, ஃபலாப், பிளாக் பஸ்டர். அதயெல்லாம் விட பெரிசு உங்கள நான் சம்பாதிச்சது தான்னு நினைக்கிறேன்" என ஒரு மேடையில் உணர்சிப்பூர்வமாக பேசியிருப்பார் விஜய். ஃப்ளேக்ஸில் பாலூத்துவது, திரையரங்குகளில் ஆட்டம் போடுவது, சிலை வைப்பது மட்டுமல்லாமல் இரத்த தானம் செய்வது, இல்லாதவர்களுக்கு உதவுவது, அரசியலில் ஈடுபடுவது என அவரது ரசிகர்கள் பல வழிகளில் அன்வை வெளிப்படுத்த முயல்வதைக் காணமுடியும்.

இவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் விஜய்க்கு கிடைத்தது எப்படி? இந்த 25 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்...

vijay
பீஸ்ட் படத்தில் விஜய் குறிப்பிடும் ரஃபேல் விமானம் குறித்த 10 தகவல்கள்
விஜய்
விஜய் Twitter
  • வெற்றி, நான் சிவப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர்.

  • சென்னை லொயாலா கல்லூரியில் காட்சி ஊடக இளங்கலைப் பிரிவில் சேர்ந்த விஜய்க்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டதால் படிப்பை பாதியில் நிறுத்தினார்.

  • விஜய்யின் முதல் படமான "நாளையத் தீர்ப்பு" படத்தை படத்தை அவரது தந்தை தான் இயக்கினார். இந்த படத்துக்கு அவது தாய் ஷோப தான் திரைக்கதை எழுதியது.

  • முதல் படத்து நினைத்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் விஜயகாந்த் நடித்த செந்தூர் பாண்டி படத்தின் மூலம் விஜய்யை ரசிகர்கள் மனதில் பதியவைக்க முடிவு செய்தனர். இந்த திட்டம் சரியாக வொர்க்கவுட்டும் ஆனது.

  • தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் ரசிகன், தேவா, விஷ்ணு போன்ற படங்களில் நடித்த விஜய் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாறத்தொடங்கினர்.

  • ஆனால் விஜயின் மீதான பிம்பங்கள் உடைந்து அவரை முழுமையான நடிகராக ரசிகர் ஏற்றுக் கொண்டது விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படத்தில் தான். இதில் அவர் ஒரு காதல் நாயகனாகவும் உருவெடுத்தார்.

  • பூவே உனக்காக படத்தைப் பார்த்து தான் விஜயின் மனைவி சங்கீதா இம்ப்ரஸ் ஆனாராம். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அவர் அப்போது லண்டனில் வசித்துவந்தார். விஜயை காண அங்கிருந்து புறப்பட்டு வந்து அறிமுகமானாராம்.

  • புதிதாக அறிமுகமாகும் ஹீரோக்களை இளைஞர்கள் தான் முதலில் ஏற்றுக்கொள்வது. குடும்பங்களுக்கு நடிகர்கள்கள் சென்று சேர ஒரு புள்ளி அமைய வேண்டும். விஜய்ஜ்க்கு அந்த புள்ளியாக அமைந்தது தான் காதலிக்கு மரியாதை திரைப்படம். இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். "என்னைத் தாலாட்ட வருவாயோ" பாடல் இன்றும் பலருக்கு இரவில் தாலாட்டாக இருக்கிறது.

vijay
ரஜினி முதல் விஜய் வரை : ரீமேக்கில் ஹிட் அடித்த 10 தமிழ் படங்கள்!
  • விஜய் அவரது கேரியரில் ஒரே மாதிரியான கதாப்பாத்திரங்களை நடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவதுண்டு. ஆனால் அவர் நெகடிவ் ஹீரோ பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அது தான் பிரியமுடன் திரைப்படம்.

  • 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் நாள் குடும்பத்தினர் ஆசிர்வாதத்தோடு காதலி சங்கீதாவின் கரம்பிடித்தார் விஜய்.

  • விஜய் - சங்கீதா உறவிலிருக்கும் ஒரு சுவாரஸ்யமான தகவல் : திருமணத்திலிருந்து இன்று வரை விஜய் அணியும் அனைத்து உடைகளும் சங்கீதா தேர்ந்தெடுப்பது தானாம்.

  • ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளியான ''குஷி'' திரைப்படம் விஜய்யின் முக்கியமான திரைப்படம். இதில் காதலர்களுக்கு இடையிலான ஈகோவை வெளிப்படுத்தும் விதமாக நடித்திருப்பார் விஜய். அவர் நடிப்பின் மற்றொரு பரிமாணம் இந்த படத்தின் மூலம் வெளிப்பட்டது.

vijay
vijayTwitter
  • விஜய்யின் காமடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு எனலாம். ஃப்ரெண்ட்ஸ் படம் அதற்கு ஓர் சிறந்த உதாரணம். இந்த படத்தின் இயக்குநர் சித்திக். விஜயின் காவலன் படத்தை எடுத்ததும் இவர் தான். ப்ரெண்ட்ஸில் விஜய்க்கு வடிவேலு பாஸ், காவலனில் வடிவேலுவுக்கு விஜய் பாஸ்!

  • கே.செல்வபாரதி இயக்கத்தில் வெளியான வசீகரா விஜயின் குறும்பு தனத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

  • பிரியமானவளே, பத்ரி, ஷாஜகான், யூத், பகவதி என கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த விஜய் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்‌ஷனிலும் கவனம் செலுத்தினார்.

  • விஜய் முழு ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கியது திருமலை படத்தில் தான். இயக்குநர் ரமணாவின் இந்த படம் அவருக்கு புதிய முகத்தைக் கொடுத்தது.

  • விஜயின் ஆக்‌ஷன் முகத்தை அகலப்படித்தியது ஒரு படம். 2005ம் ஆன்டு வந்த அந்த படத்தை குழந்தைகள் முதல் பெரியவர் வரை கொண்டாடித் தீர்த்தனர். அது தான் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக் கில்லி. இதனை இயக்குநர் தரணி இயக்கினார்.

vijay
விஜய் : முதல் படத்திலிருந்து இன்று வரை ஆனந்த விகடன் விமர்சனமும் மதிப்பெண்களும் என்ன?
  • திருப்பாச்சியும், சிவகாசியும் விஜய்க்கு வெற்றிகரமான படங்களாக அமைந்தது. அதன் பின்னர் கொஞ்சம் சறுக்கல்கள் வர மற்றொரு தெலுங்கு ரீமேக் கைக்கொடுத்தது. அது தான் பிரபு தேவா இயக்கிய போக்கிரி. ஸ்டைலிஷான ஹீரோவாக இதில் பின்னியிருப்பார் விஜய்.

  • அதன் பிறகு நண்பன், வேலாயுதம் போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்தார் விஜய். எனினும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி தான் அவருக்கு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுத் தந்தது.

  • அதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்த நேசன் என்பவருக்கு தனது ஜில்லா படத்தை இயக்க வாய்ப்பு வழங்கினார் விஜய். நெல்சன், லோகேஷ் போன்ற இளம் தலைமுறை இயக்குநர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு வழங்குகிறார். தன்னை வைத்து அழகிய தமிழ் மகன் என்ற தோல்விப் படத்தை இயக்கிய பரதனுக்கு மீண்டும் பைரவா படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

  • சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு குழந்தைகளின் பேராதரவைப் பெற்ற நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் விஜய்தான். அவரின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கொஞ்சம் குழந்தை தனத்தைக் கொண்டிருக்கும்.

  • அரசியல், சமூக கருத்துக்களை விஜய் பேசத் தொடங்கியது கத்தி படத்தில் தான். அதன் தொடர்ச்சியாக விஜய்யின் சமீபத்தியப் படங்கள் அனைத்திலும் அரசியல் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும்.

  • தென்னிந்திய அளவில் நன்றாக நடனமாடக்கூடிய நடிகர்களில் ஒருவர் விஜய். அவரின் நடனக் காட்சிகளை பார்ப்பவர்களிடம் அவருக்கு 48 வயதாகிறது என்றால் நம்பமாட்டார்கள்.

  • நடனம் மட்டுமின்றி பாடல்களும் பாடி அசத்துவார் விஜய்.

vijay
தளபதி விஜய் சொந்தக் குரலில் பாடிய 15 சிறந்த பாடல்கள் | Video Playlist
  • காதலுக்கு மரியாதை படத்துக்காக 1998-ல் ஒருமுறையும், 2005-ல் திருப்பாச்சி படத்திற்காகவும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை இருமுறை பெற்றுள்ளார் விஜய்.

  • ஒரே மாதிரியான படங்கள் என்கிற முத்திரையிலிருந்து முடிந்த வரை விலகி நிற்க முயற்சிக்கிறார் விஜய். அந்த வகையில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் குடிகார பேராசிரியராக இருந்தார். பீஸ்ட் படத்தில் ரா ஏஜென்டாக நடித்திருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com