"'துணிவு' இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை" வைரலாகும் கலைஞர் கருணாநிதியின் 9 வருட பழைய ட்வீட்

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது, 9 ஆண்டுகளுக்கு முன்னரே கருணாநிதி துணிவு படம் குறித்து ட்வீட் செய்திருப்பதாக ரசிகர்கள் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
"துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை" - வைரலாகும் கலைஞர் கருணாநிதியின் 9 வருட பழைய ட்வீட்
"துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை" - வைரலாகும் கலைஞர் கருணாநிதியின் 9 வருட பழைய ட்வீட்twitter
Published on
துணிவு இருந்தால் துக்கம் இல்லை! துணிவு இல்லாதவனுக்கு, தூக்கம் இல்லை!
மு கருணாநிதி

இன்னும் மூன்றே நாட்களில் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் பழைய ட்வீட் ஒன்று வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

சமூகவலைத்தளத்தின் வளர்ச்சி, நம்மை காலத்தை மிஞ்சி பயணிக்கவைக்கிறது. இன்று நடக்கும் விடயங்களை முன்பே சிலர் கணித்திருப்பதும், அது அப்படியே நிகழ்ந்த அதிசயங்களுக்கும் சான்று இந்த சமூக ஊடகங்கள்.

என்றோ யாரோ பேசியது இன்று தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்படியாக சில சம்பவங்கள் நிகழ்கின்றன.

இங்கிலாந்து அரசி இந்த தேதியில் இறப்பார், மெஸ்ஸி உலகக்கோப்பை கால்பந்து போட்டியை தன் 37 வயதில் வெல்வார் என சமீப காலங்களில் நிறைய உதாரணங்களை மேற்கோள் காட்டலாம்.

அந்த வகையில் தற்போது மறைந்த தமிழ்நாடு முதல்வர் மு கருணாநிதியின் ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.

"துணிவு இருந்தால் துக்கம் இல்லை! துணிவு இல்லாதவனுக்கு, தூக்கம் இல்லை!" என்பது தான் அந்த ட்வீட். கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்.

கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு, விஜய் - அஜித் நடிக்கும் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. இதனால் இரட்டிப்பு குதூகலத்தில் ரசிகர்கள் இருந்தாலும், மற்றொரு புறம் யாருடைய படம் வெல்லும் என்ற போட்டிகளும் இருக்கத்தான் செய்கிறது.

"துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை" - வைரலாகும் கலைஞர் கருணாநிதியின் 9 வருட பழைய ட்வீட்
Vetrimaran: ”ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடிப்பேன்” - வைரலாகும் இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு

இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்க, அஜித் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகிறது துணிவு படம். இதற்கு ஜிப்ரான் பின்னணி இசையமைத்திருக்கிறார்.

வம்சி பைடிபள்ளி இயக்கி, தில் ராஜு தயாரிப்பில் விஜய் ராஷ்மிகா மந்தன்னா நடிப்பில் வெளியாகிறது வாரிசு திரைப்படம்

இரண்டு படங்களின் டிரெய்லர்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இரண்டு படங்களும் வரும் ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

"துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை" - வைரலாகும் கலைஞர் கருணாநிதியின் 9 வருட பழைய ட்வீட்
Thunivu: "வியாபார போதைக்கு அடிமையாகுங்க" இயக்குநர் எச்.வினோத் இளைஞர்களுக்கு அட்வைஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com