Thunivu: "வியாபார போதைக்கு அடிமையாகுங்க" இயக்குநர் எச்.வினோத் இளைஞர்களுக்கு அட்வைஸ்!

இயக்குநர் வினோத் சமீபத்திய நேர்காணலில் இளைஞர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் அவர், "டிஜிட்டல் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை விட்டுவிட்டு, இளைஞர்கள் வியாபார போதைக்கு அடிமையாக வேண்டும். என் எல்லா படங்களிலும் நான் சொல்ல நினைக்கும் செய்தி இதுதான்." என்றார்.
Thunivu: "வியாபார போதைக்கு அடிமையாகுங்க" இயக்குநர் எச்.வினோத் இளைஞர்களுக்கு சொன்ன அட்வைஸ்!
Thunivu: "வியாபார போதைக்கு அடிமையாகுங்க" இயக்குநர் எச்.வினோத் இளைஞர்களுக்கு சொன்ன அட்வைஸ்!Twitter
Published on

டிஜிட்டல் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை விட்டுவிட்டு, வியாபார போதைக்கு இளைஞர்கள் அடிமையாகவேண்டும் எனக் கூறியுள்ளார் இயக்குநர் எச் வினோத்.

சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கியவர் எச் வினோத். இவரது இயக்கத்தில் அடுத்தது அஜித் நடிக்கும் திரைப்படம் துணிவு. இந்த படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை ஒட்டி வெளியாகிறது.

இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். வங்கி கொள்ளையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. துணிவு படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

Ajith Kumar
Ajith KumarTwitter

இந்நிலையில், இயக்குநர் வினோத் சமீபத்திய நேர்காணலில், இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அதில் அவர், "டிஜிட்டல் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை விட்டுவிட்டு, இளைஞர்கள் வியாபார போதைக்கு அடிமையாகவேண்டும். என் எல்லா படங்களிலும் நான் சொல்ல நினைக்கும் செய்தி இதுதான்." என்றார்.

மேலும், அடுத்த தலைமுறை வாழ, மொழியை, நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றாலும் இதுதான் வழி, "வியாபார போதையை வளர்த்துக்கலைன்ன, கண்டிப்பா மாட்டிக்குவீங்க" என்று கூறியுள்ளார்.

Thunivu: "வியாபார போதைக்கு அடிமையாகுங்க" இயக்குநர் எச்.வினோத் இளைஞர்களுக்கு சொன்ன அட்வைஸ்!
Vetrimaran: ”ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடிப்பேன்” - வைரலாகும் இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு

மேலும் அவர், ரசிகர்கள் படத்திற்கு என்று அதிக நேரத்தை செலவிட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.

தங்களின் ஆதர்ச நாயகனின் படம் வெளியாகிறது என்றால், ரசிகர்கள் ஒதுக்கும் நேரமும், அவர்கள் செய்யும் செலவுகளும் தான் படத்திற்கு ப்ரொமோஷன்.

இதை விட பெரிய ப்ரமோஷன் படத்திற்கு கிடைக்காது. இப்படியெல்லாம் செய்வதனால், அவர்கள் மனதில் அளவுகடந்த எதிபார்ப்பு வந்துவிடுகிறது எனவும், படம் நிச்சயம் நன்றாக இருக்கவேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிடுகின்றனர் என்றார்.

"ஆனால், ஒரு தயாரிப்பு நிறுவனத்தால் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஒதுக்கும் நேரத்திற்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது" எனக் கூறியவர், சினிமாவிற்காக நிறைய நேரம் ஒதுக்குவதில் அர்த்தமில்லை எனவும் கூறியுள்ளார்

"படம் வெளியாக மூன்று நாட்களுக்கு முன் ரிசர்வேஷனஸ் தொடங்கும். படம் பார்த்துவிட்டு பிடித்திருந்தால் நாலு பேரிடம் சொல்லுங்கள். மற்ற படம் நன்றாக இருந்தால் அதை பார்க்கச்சொல்லி கூறுங்கள். இரண்டு படத்தையும் பார்க்கும் வசதி உள்ளவர்கள், இரண்டையும் பாருங்கள். இதை தவிர, சினிமாவுக்கென்று நீங்கள் வேறெதுவும் செய்யவேண்டாம்" என்று பேசியுள்ளர் வினோத்.

Thunivu: "வியாபார போதைக்கு அடிமையாகுங்க" இயக்குநர் எச்.வினோத் இளைஞர்களுக்கு சொன்ன அட்வைஸ்!
Vaisagh : Rant முதல் துணிவு வரை - இந்த 2கே கிட்ஸ் 'மனதின் குரல்' யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com