பொன்னியின் செல்வன் : "என்னுடைய வாழ்க்கையில முக்கியமான ஆடியோ லாஞ்ச்" - ஏ.ஆர்.ரஹ்மான்

பொன்னியின் செல்வன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசினார்.
Rahman
RahmanTwitter
Published on

தமிழ் திரையுலகின் பல ஆண்டு எதிர்பார்ப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் இன்று நடைபெற்று வருகிறது.

படத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். தவிர ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் வருகை தந்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் வெளியாகியிருந்த பொன்னி நதி மற்றும் சோழா சோழா பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

மற்ற பாடல்களான அலைக்கடல், தேவரளன் ஆட்டம், ராட்சச மாமனே, சொல் பாடல்களும் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "என்னுடைய வாழ்க்கையில முக்கியமான ஆடியோ லாஞ்ச். பொன்னியின் செல்வன் நம்ம பாரம்பரியம், நம்ம கலாச்சாரம். பலர் எடுக்க ட்ரை பண்ண படம், மணி சார் பண்ணியிருக்காங்க. இந்த டீம்க்கு என்னுடைய மதிப்பும், அன்பும்.

இந்த படத்தை 10 வருஷத்து முன்னாடியே ஆரம்பிச்சோம். திரும்ப நிறுத்தப்பட்டது. பல விதமான இசை வடிவங்கள் ட்ரை பண்ணி இதை முடிவு பண்ணோம்" என்றார்.

Rahman
பொன்னியின் செல்வன் : பொன்னி நதி முதல் அலை கடல் வரை... பாடல்களை கேட்கலாம் | Spotify

மேலும் மணிரத்னம் குறித்து பேசிய ரஹ்மான், "35 - 40 வருஷம் டைரக்‌ஷன் பண்ற மணி சார் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் மாதிரி பண்றார். இது அவருக்கு பெஸ்ட் புராஜெக்ட்னு சொல்லலாம்." என்றார்.

அத்துடன், "இப்போ இருக்குற சூழலுக்கு ஏற்ற மாதிரி அதிக ஆடியன்ஸ் கிட்ட சேரவும், நம்முடைய கலாச்சாரம் பாரம்பரியத்தை பேசவும் சேர்த்து பேசும் விதமா படம் இருக்கும்." என பேசினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Rahman
Ponniyin Selvan : பொன்னி நதி பாடல் குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்ஸ் - ஒரு அடடா தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com