அஜித் பட நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன? Fact Check

நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில், அனிகாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது
actress anikha surendran death poster trending in social media
actress anikha surendran death poster trending in social mediaTwitter

அனிகா சுரேந்தரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எதற்காக இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

மலையாளநடிகையான அனிகா சுரேந்தர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் விஸ்வாசம், என்னை அறிந்தால் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். 5

Anikha Surendran
Anikha SurendranTwitter

அனிகா சுரேந்தர் புட்ட பொம்மா என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தின் வெற்றியை அடுத்து, அனிகா சுரேந்தர் ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனிகா நடித்த முத்தக் காட்சிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதன் பின்னர் கதை சொல்லும்போதே இயக்குநர் முத்தக்காட்சி குறித்து கூறியிருந்தார் என்று அனிகா விளக்கம் கொடுத்தார்.

actress anikha surendran death poster trending in social media
தீபிகா படுகோன் முதல் கரீனா கபூர் வரை- விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கும் திரை பிரபலங்கள்
anikha surendran
anikha surendranTwitter

இந்நிலையில், நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில், அனிகாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று போடப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பெயர் மாறுப்பட்டிருப்பதால், தவறுதலாக புகைப்படம் இடம்பெற்றிருக்கலாம் என பலரும் குழப்பத்தில் இருந்தனர்.

இதற்கிடையில் இந்த போஸ்டர் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் பெருமூச்சு விட்டனர்.

actress anikha surendran death poster trending in social media
பிணத்துடன் உறவு கொள்ளாமல் இருக்க கல்லறைக்கு கதவா? உண்மை என்ன? Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com