தீபிகா படுகோன் முதல் கரீனா கபூர் வரை- விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கும் திரை பிரபலங்கள்

தீபிகா படுகோன் முதல் கரீனா கபூர் வரை, முன்னணி திரைப்பிரபலங்கள் வைத்திருக்கும் கார்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
Deepika Padukone - Kareena Kapoor
Deepika Padukone - Kareena Kapoor Twitter

திரைப் பிரபலங்கள் பொதுவாக ஆடம்பரமான வீடுகள், சொகுசு கார்கள், சொந்தமாக ஜெட் விமானங்கள் என செம லக்சுரியாக தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

அப்படி தீபிகா படுகோன் முதல் கரீனா கபூர் வரை, முன்னணி திரைப்பிரபலங்கள் வைத்திருக்கும் கார்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

ஷாருக்கான் - bugatti veyron

கிங் கான் ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி கார் மற்றும் புகாட்டி வேய்ரான் என பல சொகுசு கார்களை கொண்டுள்ளார்.

புகாட்டியின் விலை சுமார் ரூ.12 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உலகின் அதிவேகமான காராகவும் அறியப்படுகிறது.

தீபிகா படுகோன் - Mercedes Maybach S500

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினான தீபிகா படுகோன், பல்வேறு ஆடம்பர கார்களை வைத்திருக்கிறார். அதில் ஒன்று இந்த Mercedes Maybach S500.இந்த காரின் விலை சுமார் 1.86 கோடியாகும்.

ரன்வீர் சிங் - Aston Martin Rapide S

ரன்வீர் சிங் உடையில் மட்டும் ஃபேஷனாக இல்லாமல் கார்கள் விஷயத்தில் இருக்கிறது.

தனது பிறந்தநாளுக்கு ரூ. 3.26 கோடி மதிப்பிலான ஆஸ்டன் மார்ட்டின் காரை தனக்கே பரிசாக வழங்க முடிவு செய்து வாங்கியுள்ளார். அவரிடம் லம்போர்கினி காரும் உள்ளது, அதன் விலை சுமார் ரூ. 3.15 கோடி.

கரீனா கபூர் கான் - Mercedes Benz S Class

கரீனா கபூர் 1.59 முதல் 1.66 கோடி வரையிலான Mercedes Benz S Class ஐ வைத்திருக்கிறார். ஆடி க்யூ7, லெக்ஸஸ் எல்எக்ஸ் 470, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகியவற்றையும் அவர் வைத்திருக்கிறார்.

Deepika Padukone - Kareena Kapoor
கிரண் பேடி முதல் அமிதாப் பச்சன் வரை : பிரபலங்கள் பகிர்ந்த போலிச் செய்திகள் | Fact Check

அமிதாப் பச்சன் - Bentley Continental GT

அமிதாப் பச்சனின் விலைமதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் ஜிடியின் விலை ரூ. 4.04 கோடியாகும்.

லம்போர்கினி முர்சிலாகோ, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் ஆகியவற்றையும் அவர் வைத்திருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா - Mercedes Maybach S650

நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸின் ஹிட் பாடலின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அவர் மனைவிக்கு ஏறக்குறைய ரூ.2.73 கோடி விலையுள்ள Mercedes Maybach S650 ஐ பரிசாக வழங்கினார்.

Deepika Padukone - Kareena Kapoor
இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த 7 நம்பர் பிளேட்கள் இதுதானாம்! காரை விட விலை அதிகமா?

ஹ்ரிதிக் ரோஷன் - Rolls Royce Ghost Series II

ஹ்ரிதிக் ரோஷன் அவரது 42வது பிறந்தநாளில் வாங்கிய கார் தான் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் . இதன் விலை சுமார் ரூ.7 கோடி என்று கூறப்படுகிறது.

அஜய் தேவ்கன் - Rolls Royce Cullinan

அஜய் தேவ்கன் சமீபத்தில் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கினார்.

இது கஸ்டமைஸ் செய்யக்கூடிய கார் ஆகும். இதன் விலை ரூ.6.95 கோடி என்று கூறப்படுகிறது.

Deepika Padukone - Kareena Kapoor
பணக்கார இந்தியர்கள் : யார் யார் சொந்தமாக ஜெட் விமானங்கள் வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com