ருஹானிகா தவான் : 15 வயதில் சொந்த வீடு வாங்கிய நடிகை - நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி!

15 வயதிலேயே மும்பையில் சொந்த வீடு வாங்கியிருக்கும் நடிகைக்கு இணையத்தில் நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தன. அவற்றுக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார் அவர்.
ருஹானிகா தவான் : 15 வயதில் சொந்த வீடு வாங்கிய நடிகை - நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி!
ருஹானிகா தவான் : 15 வயதில் சொந்த வீடு வாங்கிய நடிகை - நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி! Twitter
Published on

15 வயது நடிகை ருஹானிகா தவான் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளார்.

இந்த சிறிய வயதில் தனது மிகப் பெரிய கனவை நனவாக்கியுள்ள ருஹானிகாவுக்கு ஆன்லைனில் சில விமர்சனங்களும் வந்திருக்கின்றன.

முதலில் தான் சொந்த உழைப்பில் வீடு வாங்கியதனை இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக தெரிவித்தார் ருஹானிகா. அந்த பதிவில் இதனைச் சாதிக்க உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு நன்றியும் கூறியிருந்தார்.

ருஹானிகா தவான் : 15 வயதில் சொந்த வீடு வாங்கிய நடிகை - நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி!
Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!

ஆன்லைனில் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.

அந்த பேட்டியில், "நான் என் தலைமுறை குழந்தைகளில் இருந்து வித்தியாசமாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர். இதனை நல்ல பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். என் பெற்றோரும் இது குறித்து பெருமை கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

அத்துடன் நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலளித்தவர், "என் வயது குழந்தைளுக்கு எதிலும் அழுத்தம் தரப்படக் கூடாது. எனக்கு இது ஒரே இரவில் நடக்கவில்லை. வீட்டை வாங்குவதற்கான பணத்தை சேமிக்க பல நாட்கள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது" எனவும் பேசினார்.

ருஹானிகா தவான் : 15 வயதில் சொந்த வீடு வாங்கிய நடிகை - நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி!
Romeo Juliet: 16 வயதில் நிர்வாண காட்சி - 55 ஆண்டுகளுக்கு பின் வழக்கு தொடுத்த நடிகர்கள்

கடந்த 8 ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ருஹானிகாவின் பணத்தை சரியான முறையில் சேமித்து உதவியுள்ளார் அவரது அம்மா டோலி தவான்.

ருஹானிகா குழந்தை தொழிலாளியாக இதனை செய்கிறார் என நெட்டிசங்கள் விமர்சித்திருந்தனர். அதற்கு பதிலளித்தவர், "நான் சில ஆண்டுகளாக எந்த தயாரிப்பிலும் இணையவில்லை. இன்ஸ்டாகிராமிலும் யூடியூபிலும் வீடியோக்கள் பதிவிடுவது என்னுடைய பொழுதுபோக்கு. என்னை யாரும் எதையும் செய்யச் சொல்லி வற்புறுத்தவில்லை" என கூறியுள்ளார்.

ருஹானிகா 2012ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது சின்னத்திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ye hai mohabbatein சீரியல் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார்.

ருஹானிகா தவான் : 15 வயதில் சொந்த வீடு வாங்கிய நடிகை - நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி!
33 லட்சம் சம்பளத்தில் வேலை; வாய்ப்பை இழந்த 15 வயது சிறுவன் காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com