த்ரிஷாவுக்கு திருமணமா? மலையாள பட தயாரிப்பாளரை கரம் பிடிக்கிறாரா 96 பட நடிகை?

த்ரிஷா மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை மணமுடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trisha Krishnan
Trisha KrishnanTwitter

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் மலையாள திரைப்பட தயாரிப்பாளரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் யார், திருமணம் எப்போது, காதல் திருமணமா போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளி வரவில்லை.

தமிழில் ஜோடி படத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, மனசெல்லாம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ஹிட் கொடுத்தார். தெலுங்கில் பிரபாஸுடன் இணைந்து வர்ஷம் என்ற படத்தில் நடித்தார் த்ரிஷா.

த்ரிஷா
த்ரிஷாTwitter

இவர் தமிழில் விக்ரமுடன் இணைந்து நடித்த சாமி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு, தமிழ், தெலுங்கு இரண்டிலும் முன்னணி நடிகையானார். விஜய், அஜித், சூர்யா, நாகார்ஜுனா, சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களுடன் கைக்கோர்த்தார்.

விண்ணைத் தாண்டி வருவாயாவில் ஜெஸ்ஸி கதாபாத்திரமும், 96 படத்தில் ஜானு, பொன்னியின் செல்வனில் குந்தவை என மறக்க முடியாத கதாபாத்திரங்களுக்கு இவர் சொந்தக்காரர்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், நியூஸ் 18 தளத்தின் அறிக்கையின்படி நடிகை த்ரிஷா மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை மணமுடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தயாரிப்பாளர் யார் என்பது குறித்து, திருமணம் குறித்து வேறு எந்த தகவல்களும் இல்லை.

இதற்கு முன்னர் நடிகை த்ரிஷா, தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்று செய்திகள் வெளியான நிலையில் அவர்கள் பிரிந்தனர்.

அதன் பிறகு 2015ல் தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியன் என்பவருடன் த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயயிக்கப்பட்டது. நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில், வருணின் இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் அந்த திருமணம் நின்றுவிட்டதாக சில தினங்களில் தகவல் வெளியாகின.

Trisha Krishnan
”ஒரு பெண்ணின் இமேஜை கெடுக்கிறீர்கள்” - திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு விஷால் விளக்கம்

ஒரு நேர்காணலில் திருமணம் குறித்து பேசிய நடிகை த்ரிஷா,

“கடமைக்காக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து பெற எனக்கு விருப்பமில்லை. என்னைச் சுற்றி நிறைய முறிந்த திருமணங்களை பார்த்திருக்கிறேன்.

எனக்கு சரியான இணையயை நான் இன்னும் கண்டறியவில்லை. அதனால், அப்படி ஒரு நபர் கிடைக்கும் வரை நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன்” என்று கூறியிருந்தார்.

நடிகை த்ரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

அஜித் நடிப்பில் மகிழ் திருமேணி இயக்கவிருக்கும் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Trisha Krishnan
காதலுக்காக பாலினத்தை மாற்றிய பெண் - காதலியை கரம் பிடித்த நெகிழ்ச்சி கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com