விக்ரம்: திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை

தற்போது ஒடிடியில் வெளியாகியுள்ள நிலையில், வீக்கெண்டில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையையும் தன் வசமாக்கியுள்ளது, விக்ரம் திரைப்படம்.
Vikram Stills
Vikram StillsTwitter
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, நரேன், சூரியா ஆகியோர் நடிப்பில் வெளியானது விக்ரம் திரைப்படம்.

ஜூன் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் கடந்த ஜூலை 8ஆம் தேதி ஒடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் வெளியாகிப் பல வசூல் சாதனைகளை படைத்த இத்திரைப்படம், ஒடிடி தளத்திலும் சாதனைப் புரிந்துள்ளது. வெளியான முதல் வாரத்திலேயே அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக மாறியுள்ளது விக்ரம்.

மேலும், இத்திரைப்படத்தை பார்ப்பதற்காகவே அதிக சப்ஸ்க்ரிப்ஷன் பெற்றதோடு, அதிக முறை, அதிக நேரம் பார்க்கப்பட்ட திரைப்படமாகவும் மாறியுள்ளது விக்ரம்.

வெளியான முதல் நாளே இந்தியா முழுவதும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த படம், ஒடிடி தளத்தை அடைவதற்கு முன்பு 400 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டும் 300 கோடி. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், வெளியான முதல் நான்கு வாரத்திற்குள்ளேயே, பாகுபலி இரண்டாம் பாகத்தின் 150 கோடி வசூலை மிஞ்சி, 170 கோடி கலெக்ஷன் பெற்றது கமல்ஹாசனின் விக்ரம்.

Vikram Stills
Vikram Box Office: கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தற்போது, ஒடிடியில் வெளியாகியுள்ள நிலையில், வீக்கெண்டில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையையும் தன் வசமாக்கியுள்ளது, இத்திரைப்படம்.

1986ல் வெளியான விக்ரம் திரைப்படத்தில், உளவாளியாக கமல் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தின் நீட்சியாக தான் இத்திரைப்படத்தின் கதையை இயக்குநர் எழுதியிருந்தார். மேலும், இத்திரைப்படத்தில், லோகெஷ் தன் முந்தய திரைப்படமான கைதியின் கதையையும் இணைத்திருந்ததால், இது LCU என்றழைக்கப்பட்டு வருகிறது.

Vikram
VikramTwitter

அதாவது, ஹாலிவுட்டில் மார்வெல் திரைப்படங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும். அதை மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்று அழைப்பார்கள். அதே போல தான் இந்த LCU -லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ். இனி தான் எடுக்கும் படங்களை கதைக்கேற்ப ஒன்றொடு ஒன்று இணைத்து எடுக்கப்போவதாக இயக்குநர் கூறியுள்ளார்.

அடுத்து தளபதி விஜய்யை வைத்து எடுக்கும் படம் LCUவின் அங்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Vikram Stills
ஏஜெண்ட் டீனா : விக்ரம் திரைப்படத்தில் தெறியாய் இருந்த இந்த Agent Tina யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com