பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஆலியா பட் - ரன்பீர் கபூருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. திரையுலகை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
நடிகை ஆலிய பட் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் காதலித்து, கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக அறிவித்திருந்தார் ஆலியா.
இன்று காலை ஆலியா பட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தது. நட்சத்திர தம்பதிக்கு குழந்தை பிறக்கவுள்ளதாக இணையத்தில் பேச்சுக்கள் எழுந்தன.
இந்நிலையில் ரன்பீர் கபூர் ஆலியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இண்டியா டைம்ஸ் பத்திரிக்கையிடம் பேசிய ஆலிய பட்டின் தந்தையும் இயக்குநருமான மகேஷ் பட், "புதிய சூரியன் உதிப்பதற்காக காத்திருக்கிறோம். வாழ்க்கையின் ஒரு புதிய, பிரகாசமான பனித்துளி" என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
இது குறித்து ஆலியா - ரன்பீர் தமப்தி கூறியதாவது, "எங்கள் வாழ்வின் சிறந்த செய்தியாக, எங்கள் குழந்தை பிறந்துவிட்டாள்" என்றும், அன்பினாலும், காதலினாலும் பூரித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust